பிறயன் லாறா

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் From Wikipedia, the free encyclopedia

பிறயன் லாறா

பிறயன் சார்லஸ் லாறா (Brian charles Lara) (பிறப்பு: மே 2, 1969) என்பவர் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் ஆவார்.[1][2] அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.[3][4][5] தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் பலசமயங்களில் முதல் இடத்தில் இருந்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தது.[6] மேலும் 1994 ஆம் ஆண்டில் தர்ஹாம் அணிக்கு எதிராக 501 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருவர் ஐந்து சதம் எடுப்பது அதுவே முதல் முறை. இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 400 ஓட்டங்கள் எடுத்து வீழாமல் இருந்தார்.[7] இந்த ஓட்டங்களே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஒரு பகுதியில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.லாறா மட்டுமே நூறு, இருநூறு, முந்நூறு, நாநூறு, ஐந்நூறு ஆகிய ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் ஆவார்.[8][9] தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒர் ஓவரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவரும் லாறா தான். 2003 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பெய்லி இந்தச் சாதனையை சமன் செய்தார்.[10]

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
பிறயன் லாறா
Thumb
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிறயன் சார்லசு லாறா
பிறப்புமே 2, 1969 (1969-05-02) (அகவை 55)
சாண்டா குரூஸ் ,டிரினிடாட்
பட்டப்பெயர்Prince
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைஇடது கை
பந்துவீச்சு நடைவலது கை
பங்குநடுத்தர வரிசை மட்டையாளர்
வலைத்தளம்http://bclara.com
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 196)6 டிசம்பர் 1990 எ. பாக்கித்தான்
கடைசித் தேர்வு27 நவம்பர் 2006 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 59)9 நவம்பர் 1990 எ. பாக்கித்தான்
கடைசி ஒநாப21 ஏப்ரல் 2007 எ. இங்கிலாந்து
ஒநாப சட்டை எண்9
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
1987–2008திரினிடாட் டொபாகோ
1992–1993நார்தன் டிரான்ஸ்வால் துடுப்பாட்ட அணி
1994–1998வார்விக்சயர் துடுப்பாட்ட அணி
2010சதர்ன் ராக்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே ஒ.ப.து மு.து ப. அ
ஆட்டங்கள் 131 299 261 429
ஓட்டங்கள் 11,953 10,405 22,156 14,602
மட்டையாட்ட சராசரி 52.88 40.48 51.88 39.67
100கள்/50கள் 34/48 19/63 65/88 27/86
அதியுயர் ஓட்டம் 400* 169 501* 169
வீசிய பந்துகள் 60 49 514 130
வீழ்த்தல்கள் 4 4 5
பந்துவீச்சு சராசரி 15.25 104.00 29.80
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/5 1/1 2/5
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
164/– 120/– 320/– 177/–
மூலம்: கிரிக் இன்போ.com, 4 பெப்ரவரி 2012
மூடு

1999 இல் பார்படோசுவில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக வீழாமல் 153 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இந்தப் போட்டியை இரண்டாவது சிறந்த மட்டைச் செயல்பாடாக தரவரிசைப்படுத்தியது. 1937 ஆம் ஆண்டில் ஆஷஸ் போட்டியில் டான் பிராட்மன் 270 ஓட்டங்கள் அடித்தது முதல் இடத்தில் உள்ளது.[11] விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது சிறந்த தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரனை அறிவித்தது.[12][13][14] முரளிதரன், லாறாவிற்கு பந்துவீசுவது தான் மிகச் சவாலாக இருந்ததாகக் கூறினார்.[15] 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்டாளராக லாறா தேர்வானார்.[16] சோபர்ஸ் மற்றும் ஷேன் வோர்ன்க்கு அடுத்தபடியாக பி பி சி யின் இஓவர்சீஸ் விருது பெறும் மூன்றாவது வீரர் லாறா ஆவார்.[17]

நவம்பர் 27,2009 ஆம் ஆண்டிலி ஆர்டர் ஆஃப் ஆத்திரேலியா எனும் விருதினைப் பெற்றார்.[18] செப்டம்பர் 14, 2012 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டார். 2012-2013 இல் நடைபெற்ற விழாவில் கிளென் மெக்ரா மற்றும் இங்கிலாந்து பெண் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சகலத் துறையர் எனித் பேக் வெல் ஆகியோருக்கும் இந்த விழாவில் ஹால் ஆஃப் ஃபேமாக அறிவிக்கப்பட்டனர்.[19][20]

பிறயன் லாறா தெ பிரின்ஸ் ஆஃப் போர்ட் ஆஃப் ஸ்பெயின் அல்லது தெ பிரின்ஸ் எனவும் அழைக்கப்பட்டார்.[21]

ஆரம்பகால வாழ்க்கை

பிறயன் லாறா மே 2, 1969 இல் சாண்டாகுரூஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்தார். இவரின் தந்தை பண்டி. லாறாவின் பெற்றோருக்கு மொத்தம் பதினொரு குழந்தைகள் உள்ளனர். இவரின் மூத்த சகோதரி ஆக்னஸ் சைரஸ் , லாறாவிற்கு ஆறு வயதாக இருக்கும் போதே ஹார்வர்டு பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். இதன் மூலம் மிகச் சிறு வயதிலேயே துடுப்பாட்ட நுட்பங்களைக் கற்றார். புனித ஜோசப் ரோமன் கத்தோலிக்க துவக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். இவரின் பதினான்காம் வயதில் பாத்திமா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு ஹேரி ராம்தாஸ் என்பவரின் பயிற்சியின் கீழ் சிறந்த விளையாட்டு வீரரானார்.

1993 ஜனவரியில் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் நூறு ஓட்டங்களை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் எடுத்தார். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி தொடரினை 2-1 எனும் கணக்கில் வென்றது.அந்தப் போட்டியில் இவர் 277 ஓட்டங்களை எடுத்தார்.

அதிக ஓட்டங்கள் எடுப்பதில் லாரா பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார். முதல் தர துடுப்பாட்டத்தில் (1994 ஆம் ஆண்டில் டர்ஹாம் துடுப்பாட்ட அணிக்கு எதிராக வார்விக்ஷயர் துடுப்பாட்ட அணி சார்பாக இவர் இருதிவரை ஆட்டமிழக்காமல் 501 ஓட்டங்களை எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 2004 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 400 ஓட்டங்களை எடுத்துள்ளார். 427 பந்துகளில் 474 நிமிடங்களில் 501 ஓட்டங்கள் எடுத்தார். அவர் 308 ஓட்டங்களை பவுண்டரிகளில் எடுத்தார். (10 ஆறுகள் மற்றும் 62 நான்கு ஓட்டங்கள் இதில் அடங்கும்) இதில் ரோஜர் டுவோஸ் (115 - 2 வது இணைக்கு), ட்ரெவர் பென்னி (314 - 3 வது இணை), பால் ஸ்மித் (51 - 4 வது இணை) மற்றும் கீத் பைபர் (322 ஆட்டமிழக்காதது- 5 வது) ஆகியோருடன் இணைந்து இந்த ஓட்டங்களை எடுத்தார்.

1994 ஆம் ஆண்டில் இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் 375 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார். பின்னர் இது ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரான மாத்தியூ எய்டன்2003 ஆம் ஆண்டில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது முறியடித்தார்.பின்னர் இந்தச் சாதனையினை இவர் 400 ஓட்டங்கள் எடுத்து முறியடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

லாராவுக்கு சிட்னி என்ற மகள் 1996 ஆம் ஆண்டில் பிறந்தார். . லாராவுக்கு பிடித்த மைதானங்களில் ஒன்றான சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் நினைவாக சிட்னி என பெயரிடப்பட்டது.1993 ஜனவரியில் சிட்னி துடுப்பாட்ட அரங்கத்தில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது முதல் நூறு ஓட்டங்களை தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் எடுத்தார். இதன்மூலம் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி தொடரினை 2-1 எனும் கணக்கில் வென்றது.அந்தப் போட்டியில் இவர் 277 ஓட்டங்களை எடுத்தார்.இதன் நினைவாக தனது மகளுக்கு இந்தப் பெயரினைச் சூட்டினார்.

லாரா முன்னாள் டர்ஹாம் கவுண்டி துடுப்பாட்ட சங்க வரவேற்பாளர் மற்றும் பிரித்தானிய உள்ளாடை மாதிரி அழகியான லின்சி வார்டுடன் உறவு நிலைப் பொருத்ததில் ஈடுபட்டார். அவரது தந்தை மாரடைப்பால் 1989 இல் இறந்தார், அவரது தாயார் புற்றுநோயால் 2002 இல் இறந்தார். 2009 ஆம் ஆண்டில், லாரா மேற்கு இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கான சேவைகளுக்காக ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியாவின் (AM) கவுரவ உறுப்பினராக நியமிக்கப்பட்டார். டிரினிடாட் மற்றும் டொபாகோவில் 2017 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட அரங்கத்திற்கு இவரது நினைவாக பிரையன் லாரா அரங்கம் எனப் பெயரிடப்பட்டது.

சான்றுகள்

வெளியிணைப்புக்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.