பிரெட் டொயோசபுரோ கோரெமாட்சு (Fred Toyosaburo Korematsu, சனவரி 30, 1919 – மார்ச் 30, 2005) அமெரிக்க மனித உரிமைப் போராளி. இரண்டாம் உலகப்போரின் போது சப்பானிய அமெரிக்கர்களை தடுப்பு முகாமில் வைத்ததை இவர் எதிர்த்தார். முடியாட்சியிலிருந்த சப்பானிய கடற்படை பேர்ள் துறைமுகத்தை இரண்டாம் உலகப்போரின் போது தாக்கியதை தொடர்ந்து பிராங்க்ளின் ரூசவெல்ட் அனைத்து சப்பானிய அமெரிக்கர்களையும் தடுப்புக்காவலில் வைக்க தன் அதிகாரத்தை பயன்படுத்தி அதிபர் ஆணை 9066 என்பதை பிறப்பித்தார். இதனை எதிர்த்த கோரெமாட்சு தலைமறைவாக இருந்தார்.
பிரெட் கோரெமாட்சு | |
---|---|
பிறப்பு | ஓக்லண்டு, கலிபோர்னியா, அமெரிக்கா | சனவரி 30, 1919
இறப்பு | மார்ச்சு 30, 2005 86) மெரின் கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்கா | (அகவை
இறப்பிற்கான காரணம் | மூச்சுவிடுதல் கோளாறு |
கல்லறை | மவுண்டன் வியு இடுகாடு (ஓக்லண்டு, கலிபோர்னியா) 37°50′06″N 122°14′12″W |
நினைவகங்கள் | • பிரெட் கோரெமாட்சு தொடக்கப் பள்ளி, தேவிசு • சான் லியன்ரோ உயர்நிலைப் பள்ளியின் பிரெட் கோரெமாட்சு வளாகம் • பிரெட் கோரெமாட்சு கண்டுபிடிப்பு கழகம், ஓக்லண்டு |
இருப்பிடம் | • டோபாசு போர் மீள்குடியிறுப்பு மையம் • சால்ட் லேக் நகரம் யூட்டா • டிட்ராயிட் மிச்சிகன் |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | உயர் நிலை |
படித்த கல்வி நிறுவனங்கள் | கேசுடல்மாண்ட் உயர் நிலைப் பள்ளி, ஓக்லண்டு |
வாழ்க்கைத் துணை | கேத்தரின் பியர்சன் கோரெமாட்சு |
பிள்ளைகள் | காரேன் கோரெமாட்சு கென் கோரெமாட்சு |
விருதுகள் | அதிபரின் விடுதலை பதக்கம் |
வலைத்தளம் | |
http://www.korematsuinstitute.org |
தடுப்புக் காவல் முகாம்களில் சப்பானிய அமெரிக்கர்களை அடைத்தது தொடர்பான ஆணை\சட்டத்தை எதிர்த்து அதைக்குறித்து அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். நீதிமன்றம் இந்த ஆணை சட்டபூர்வமாக செல்லும் என்று கூறி அமெரிக்க அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு கூறியது[1] கோரெமாட்சு அதிபர் ஆணையை மீறியதற்கான தண்டனையை பல பத்தாண்டுகளுக்கு பின் நீதிமன்றம் ஆச்சட்டத்திதன் (ஆணையின்) அவசயம் தேவையா என்பது குறித்து புதிய ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து குற்றமற்றவர் என தீர்ப்பளித்தது. போர் நடந்து கொண்டிருந்த போது இவ்வாதரத்தை அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் இருந்து மறைத்துவிட்டது.
இவரது போட்டத்தின் நினைவாக மனித பிரெட் கோரெமாட்சுவின் உரிமையும் அரசமைப்புமாகிய நாள் என்அபதை 2011 சனவரி 30 முதல் கலிபோர்னியா மாநிலம் கடைபிடிக்கிறது . வர்சீனியா 2015 அன்று இவரது நினைவை சனவரி 30 கொண்டாட சட்டம் இயற்றியுள்ளது. இது இவரது நினைவை கொண்டாடும் இரண்டாவது மாநிலமாகும்[2]
பிரெட் டி கோரெமாட்சு கழகம் 2009இல் இவரது சிறப்புகளை கொண்டாட கற்க மனித உரிமைகளை அனைத்து குமகத்திற்கும் எடுத்து சொல்ல ஆரம்பிக்கப்பட்டது
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.