பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ளது. பிரித்தானிய கன்னித் தீவுகளில் டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளும் மேலும் பல சிறிய தீவுகளும் மணல்மேடுகளும் காணப்படுகின்றன. இங்கு அண்ணளவாக 15 தீவுகளில் குடியேற்றங்கள் காணப்படுகின்றன. மண்டலத்தில் காணப்படும் மிகப்பெரிய தீவான டொர்டோலா சுமார் 20 கி.மீ. (சுமார் 12 மைல்) நீளமும் 5 கி.மீ.(சுமார் 3 மைல்) அகலமும் கொண்டதாகும். இம்மண்டல அண்ணளவாக 22,000 மக்களைக் கொண்டுள்ளது இதில் சுமார் 18,000 பேர் டொர்டோலாவில் வசிக்கின்றனர். மண்டலத்தில் தலைந்கரான ரோட் டவுண் டொர்டோலாவில் அமைந்துள்ளது.
பிரி்த்தானிய வெர்ஜின் தீவுகள் | |
---|---|
குறிக்கோள்: "Vigilate" (இலத்தீன்) "Be Watchful" | |
நாட்டுப்பண்: "கோட் சேவ் த குயிண்" | |
தலைநகரம் | ரோடு டவுன் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
அரசாங்கம் | பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் |
• அரச தலைவர் | இரண்டாம் எலிசபேத் |
• ஆளுனர் | டேவிட் பியரே |
• பிரதமர் | றல்ப் டி. ஓநீள் |
பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் | |
• தனியான காலனி | 1960 |
• சுயாட்சி மண்டலம் | 1967 |
பரப்பு | |
• மொத்தம் | 153 km2 (59 sq mi) (216வது) |
• நீர் (%) | 1.6 |
மக்கள் தொகை | |
• 2005 கணக்கெடுப்பு | 22,016 |
• அடர்த்தி | 260/km2 (673.4/sq mi) (68வது) |
நாணயம் | அமெரிக்க டொலர் (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (Q) |
ஒ.அ.நே-4 (not observed) | |
அழைப்புக்குறி | 1 284 |
இணையக் குறி | .vg |
வரலாறு
வெர்ஜின் தீவுகள் கி.மு. 100 அண்டளவில் தென் அமெரிக்காவிலிருந்து வந்த அராவாக் இந்தியர்களால் முதலாவதாக குடியேறேறப்பட்டது. கி.மு. 1500 முதல் இங்கு அமெரிக்க இந்தியர்கள் வசித்தற்காண சான்றுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.[1] 15 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுகளில் வசித்து வந்த அராவாக் இந்தியர்களை சிறிய அண்டிலுசுத் தீவுகளிலிருந்து வந்த தீவிர கரிப் இனக் குடிகள் வெளியேற்றினர்கள்.
வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆவார் இவர் 1493இல் அமெரிக்கா நோக்கிய தனது இரண்டாவது கடற்பயணத்தின் போது இத்தீவை அடைந்தார். கொலம்பஸ் இத்தீவிற்கு Santa Ursula y las Once Mil Vírgenes ( புனித ஊர்சுலாவும் அவரது 1000 கன்னியரும்) எனப் பெயரிட்டார். பின்னர் Las Vírgenes எனச் சுறுக்கப்பட்டது.
எசுப்பானிய பேரரசு 16 ஆம் நூற்றாண்டில் இத்தீவுகளுக்கு உரிமைக் கோரியது எனினும் நிரந்தர குடியேற்றங்களை அமைக்கவில்லை. பின்வந்த ஆண்டுகளில் பிரித்தானியா,நெதர்லாந்து, பிரான்ஸ் Snish டென்மார்க் போன்ற நாடுகள் இத்தீவுகளிற்கு உறிமைக் கோரின. இத்தீவுகளில் முதற்குடிகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடையாது எனினும் கிட்டிய செயிண்ட்.குரொயிஸ் தீவில் காணப்பட்ட முதற்குடிகள் முற்றாக அழிக்கப்பட்டது.
நெதர்லாந்து 1648 ஆம் ஆண்டளவில் டொர்டோலாத்தீவில் நிரந்தர குடியேற்றமொறை அமைத்தனர். 1672 இல் இங்கிலாந்து டொர்டோலாவைக் கைப்பற்றியது, 1680 இல் அனேகாடா, வெர்ஜின் கோர்டாத் தீவுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் 1672 முதல் 1733 வரையான காலப்பகுதியில் டென்மார்க் அருகிலுள்ள செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டது.
பிரித்தானியர் இத்தீவுகளை அவற்றில் கேந்திர முகியத்துவம் வாய்ந்த இடத்துக்காக வைத்திருந்தாலும் இத்தீவில் வர்த்தாக நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர். இங்கு ஆரம்பிக்கப்பட்ட கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக அடிமைகளாக ஆபிரிக்காவிலிருந்து மக்கள் கொண்டுவரப்பட்டனர். 1800களில் நடுப்படுகுதிவரை இக்கரும்புத் தோட்டங்கள் இத்தீவுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக விளங்கியது. 1800களின் நடுப்பகுதிக்குப் பின்னர், ஐக்கிய அமெரிக்காவில் கரும்பு மற்றும் ஐரோப்பாவில் சினிபீட் வளர்க்கத் தொடங்கியதன் காரணமாகவும் , அடிமைமுறை மண்டலத்துள் நீக்கப்பட்டது காரணமாகவும் பல நாசகார சுறாவளிகள் காரணமாகவும் [2] கரும்பு உற்பத்தி பெருமளவில் குறைந்து, இத்தீவு பொருளாதார வீழ்ச்சியை எதிர் கொண்டது.
1917 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா செயிண்ட். தோமஸ், செயிண்ட்.குரொயிஸ் தீவுகளை 25 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக் கொடுத்து வாங்கி அமெரிக்க வெர்ஜின் தீவுகள் எனப் பெயர் மாற்றம் செய்தது. இம்மண்டலத்தின் பெயர் வெர்ஜின் தீவுகள் என்பதேயானாலும் அமெரிக்க மண்லத்திலிருந்து இத்தீவுகளை வேறுபடுத்தும் நோக்கில் 1917 இல் இருந்து இம்மண்டலம் பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் என்றே அழைக்கப்பட்டு வந்தது.[3] 2000 ஆண்டுகளில் ஆரம்பம் முதல் போட்ட்ரிகோ தனது கலேப்ரா, வியேகுயிஸ் என்ற தீவுகளை உல்லாசப்பிரயாணிகளைக் கவரும் பொருட்டு எசுப்பானிய வெர்ஜின் தீவுகள் என்று அழைத்து வருகின்றது.
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள், காற்றுமுகத்தீவுகளில் ஒரு பகுதியாகவும், செயிண்ட். கிட்ஸ் நெவிசின் ஒரு பகுதியாகவும் தீவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகள் மூலமாகவும் என்றவாறு பலவராக ஆட்சி செய்யப்பட்டு வந்துள்ளன. தனியான காலனித்துவம் என்ற தகுதி 1960இல் வழங்கப்பட்டது மேலும் 1967 இல் சுயாட்சி வழங்கப்பட்டது. தற்போது இத்தீவுகள் பாரம்பரியமாக கடைப்பிடித்துவந்த விவசாயத்தை முதன்மைப் படுத்திய பொருளாதார முறையிலிருந்து நீங்கி உல்லாசப் பிரயாணக் கைத்தொழில், மற்றும் சேவைகள் போன்றவற்றை முதன்மை படுத்தியுள்ளது.
புவியியல்
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் சுமார் 60 உப அயணமண்டலத் தீவுக்ளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 20 கி.மீ. நீள்மும் 5 கி.மீ. அகலமும் கொண்ட டொர்டோலா தீவு முதல் மனித வாசத்திற்கு பொருந்தாத சிறிய மணல்மேடுகள் வரையடங்கும். வெர்ஜின் தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ள இம்மண்டலத்தின் மேற்கில் அமெரிக்க வெர்ஜின் தீவுகளும் வடக்கே அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே கரிபியக் கடலும் அமைந்துள்ளன. இம்மண்டலத்தின் பெரும்பாண்மையானத் தீவுகள் எரிமலை மூலம் தோன்றியவையாகும். இவை கரடுமுரணனான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளன. அனேகாடா புவியியல் ரீதியாக மண்டலத்தின் ஏனைய தீவுகளிலிருந்து வேறுபட்டத் தீவாகும். இது முருகை பாற்களால் ஆனத் தட்டையான புவியியல் அமைப்பைக் கொண்டத் தீவாகும். டொர்டோலா, வெர்ஜின் கோர்டா, அனேகாடா, ஜோஸ்ட் வன் டைக் என்ற முக்கிய நான்கு தீவுகளுக்கு மேலதிகமாக பின்வரும் தீவுகளும் காணப்படுகின்றன:
|
|
காலநிலை
பிரித்தானிய வெர்ஜிந்தீவுகள் ப்ருவக்காற்றுகளால் கட்டுப்படுத்தப்படும் அயணமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது. வெப்பநிலை வேறுபாடு மிகச் சிறியதாகவே காணப்படுகிறது. தலைநகரம் ரோட் டவுணில் கோடைக் காலத்தில் அதி கூடிய வெப்பநிலை 32 பாகை செல்சியசாகவும் குளிகாலத்தில் அதுகூடிய வெப்பநிலை 29 பாகை செல்சியசாகவும் காணப்படுகிறது. கோடைக் காலத்தில் அதி குறைந்த வெப்பநிலை 24 பாகை செல்சியசாகவும் குளிகாலத்தில் அதி குறைந்த வெப்பநிலை 21 பாகை செல்சியசாகவும் காணப்படுகிறது. சராசரியாக ஆண்டுக்கு 1150 மி.மி. மழைவீழ்ச்சி கிடைக்கிறது. மிகவும் கூடிய மழைவீழ்ச்சி அக்டோபர், நவம்பர் மாதங்களில் கிடைக்கிறது.ஜூன் தொடக்கம் நவன்பர் வரையான சூறாவளிப் பருவத்தில் சில சூறாவளிகள் இத்தீவைத் தாக்குகின்றன.
அரசியல்
நிறைவேற்றதிகாரம் அரசியிடமே தங்கியுள்ளது அவருக்குப் பதிலாக பிரித்தானிய பாராளுமன்றின் ஆலோசனைப்படி அரசியால் நியமிக்கப்பட்ட ஆளுனர் ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றார். வெளியுரவு மற்றும் பாதுகாப்பு ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2007 ஆம் ஆண்டு புதிய யாப்பு ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.[4] இதன் படி அரச தலைவர் பிரதமராவார் இதற்கு முன்னர் இப்பதவி முதலமைச்சர் என் அழைக்கப்பட்டது. இங்கு ஒரு சபையையும் 13 ஆசனங்களையும் கொண்ட சட்டவாக்கக் கழக முறை உள்ளது. தற்போதைய ஆளுனர் டேவிட் பியரே ஆவார், மேலும் தற்போதைய பிரதமர் ற்ல்ஃப் டி. ஓநீள் ஆவார்.
உட்பிரிவுகள்
நிர்வாக மாவட்டங்கள்
மண்டலம் 5 மாவட்டங்களைக் கொண்டுள்ளது. இவை நிர்வாக அலகுகளாக தொழிற்படுவதைவிட திட்டமிடல் அலகுகளாகவே காணப்படுகின்றன.[5][6]
உட்பிரிவு | முக்கிய நகரம் | பரப்பு km² | மக்கள் தொகை (2006 மதிப்பீடு) |
---|---|---|---|
அனேகாடா | த செட்டில்மண்ட் | 38.6 | 204 |
ஜோஸ்ட் வன் டைக் | கிரேட் ஆர்பர் | 8.3 | 176 |
டொர்டோலா | ரோட் டவுண் | 59.2 | 16630 |
வெர்ஜின் கோர்டா | ஸ்பெனிஷ் டவுண் | 21.2 | 3063 |
ஏனையத் தீவுகள் | பீட்டர் தீவு | 23.7 | 181 |
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் | ரோட் டவுண் | 151.0 | 20253 |
ஏனையத் தீவுகள் என்பதில் மீதமுள்ள எல்லாத்தீவுகளும் அடங்குவதில்லை மாறாக டொர்டோலாவுக்கு தெற்கேயும் வெர்ஜின் கோர்டாவுக்கு தென்மேற்காகவும் காணப்படும் ஜிஞ்சர் தீவு,பீட்டர் தீவு,கூப்பர் தீவு,சால்ட் தீவுகள் மாத்திரமே இதில் அடக்கப்பட்டுள்ளன. ஏனய சிறிய தீவுகள் அவற்றுக்கு அண்மையில் காணப்படும் முக்கிய தீவோடு இணைத்து பிரிக்கப்பட்டுள்ளன.
குடிப் பதிவு மாவடங்கள்
இங்கு 6 குடி மதிப்பு மாவட்டங்கள் காணப்படுகின்றன:
குடிப் பதிவு மாவடம் | பகுதி |
---|---|
மாவட்டம் A | வெர்ஜின் கோர்டா |
மாவட்டம் B | அனேகாடா |
மாவட்டம் C | கிழக்கு மூளை (டொர்டோலா) |
மாவட்டம் D | ரோட் டவுண் (டொர்டோலா) |
மாவட்டம் E | மேற்கு மூளை (டொர்டோலா) |
மாவட்டம் F | ஜோஸ்ட் வன் டைக் |
குடிப்பதிவு மாவட்டங்கள் C, D, E என்பன டொர்டோலா மாவடத்தில் அமைந்துள்ளன.[7]
தேர்தல் மாவட்டங்கள்
- யாப்பின் படியும் 1954 ஆம் ஆண்டு தேர்தல் சட்டத்தின் மூலமும் மண்டலம் 5 தேர்தல் மாவட்டங்களாக பிரிகப்பட்டது. ரோட் டவுண் மாவட்டத்திலிருந்து இரண்டு பிரதிநிதிகளும் ஏனைய மாவட்டங்களிலிருந்து ஒரு பிரதிந்தியும் தெரிந்தெடுக்கப்படுவர்.
- 1967 ஆம் ஆண்டின் யாப்பின் படி 7 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 7 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
- 1977 இல் , தேர்தல் மாவட்டங்கள் 9 ஆக கூட்டப்பட்டன இவ்வொரு தேர்தல் தொகுதியிலிருந்து ஒவ்வொரு பிரதிந்திகள் சட்டவாக்கக் கழகத்துக்கு தெரிவுச் செய்யப்பப்படுகின்றனர், 4 மேலதிக பிரதிநிதிகள் பெரும்பான்மையால் தெரிவுச் செய்யப்படுகின்றனர்.[8][9]
தேர்தல் மாவட்டம் | Area |
---|---|
முதலாம் தேர்தல் மாவட்டம் | மேற்கு மூளை, கரட் பே (டொர்டோலா) |
இரண்டாம் தேர்தல் மாவட்டம் | மேயர்ஸ், கேன் கார்டன் பே, புருவர்ஸ் பே(டொர்டோலா), ஜோஸ்ட் வன் டைக் |
3ஆம் தேர்தல் மாவட்டம் | சீ கௌஸ் பே, அதன் அயன் பகுதிகள் (டொர்டோலா) |
4ஆம் தேர்தல் மாவட்டம் | ரோட் டவுண் மற்றும் அதன் அயன் பகுதிகள் (டொர்டோலா) |
5ஆம் தேர்தல் மாவட்டம் | அன்டம் கட் மற்றும் லோம்க் டிரென்ச் (டொர்டோலா) |
6ஆம் தேர்தல் மாவட்டம் | பௌகர்ஸ் பே, கிழக்கு மத்திய டொர்டோலா |
7ஆம் தேர்தல் மாவட்டம் | Long Look (டொர்டோலா), பீஃப் தீவு |
8ஆம் தேர்தல் மாவட்டம் | கிழக்கு மூளை, கீரிலாண்ட், ஓப் தோட்டம் (டொர்டோலா) |
9ஆம் தேர்தல் மாவட்டம் | வெர்ஜின் கோர்டா,அனேகாடா |
பொருளாதாரம்
பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் கரிபியத்தில் சிறந்த பொருளாதாரதைக் கொண்டு விளங்குகிறது. ஆள்வீத வருமானம் 38,500 அமெரிக்க டொலராகும் (2004 மதிப்பீடு).[10]
உல்லாசப் பிரயாணம் மற்றும் சேவைகள் துறை பிரித்தானிய வெர்ஜின் தீவுகளின் பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய காரணிகளாகும். அதிகளவான மக்கள் உல்லாசப்பிரயணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சேவைகள் துறை அதிக வருவாய் பெற்றுத்தரும் துறையாக உள்ளது.
உல்லாசப்பிரயாணத்துறை மணடலத்தின் வருவாயில் 45 விழுக்காட்டை ஈட்டிக் கொடுகிறது. இந்த தீவுகள் ஐக்கிய அமெரிக்க குடிகளின் பிரசித்தமான உல்லாசப்பிரயான கழிப்பிடமாகும். சுமார் 350,000 உல்லாசப்பிரயாணிகள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இங்கு வருவதாக 1997 இல் மதிப்பிடப்பட்டது. இங்குள்ள வெள்ளை மணல் கடற்கரைகளும் முருகை பாறைகளும் முக்கிய உல்லாசப்பிராயாண கவர்ச்சிகளாகும்.
வெளிநாட்டு நிறுவனங்களின் பதிவு காரணமாகவும் பெருமளவான வருவாய் ஈட்டப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு 550,000 நிறுவனங்கள் இங்கு பதிவு செய்துள்ளன. 2000 KPMG அறிக்கையின் படி உலகின் கரை கடந்த நிறுவனங்களில் 41% மானவை பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் பதிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
விவசாயம் மண்டலத்தின் மொத்த வருவாயில் ஒரு சிறிய பகுதியையே ஈட்டிக் கொடுக்கிறது. விவசாய உற்பத்திகளில் பழங்கள், கரும்பு, மரக்கரி, கால்நடை என்பனவும் ரம் வடிக்கட்டலும் அடங்கும்.
அமெரிக்க டொலர் 1959 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய வெர்ஜின் தீவுகளில் புழக்கத்தில் உள்ளது.
பிரித்தானிய வெர்ஜிந் தீவுகள் போதைப் பொருள் கடத்துபவர்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான முக்கிய வழியாக விளங்குகிறது. பொதுநலவாய அலுவலக அறிக்கையின் படி போதைப் பொருள் கடத்தல் வெர்ஜின் தீவுகளின் எதிர்காலத்துக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும்[11].
மக்கள் கணிப்பியல்
2003 ஆம் ஆண்டு இம்மண்டலத்தின் மொத்த மக்கள்தொகை 21,730 ஆகும். இதில் 83% இத்தீவிற்கு அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆபிரிக்க மக்களுக்கும் ஐரோப்பியருக்கும் பிறந்த ஆபிரிக்க கரிபியராவர். ஏனைய இனத்தவர்கள் பிரித்தானிய ஐரோப்பிய தொடக்கத்தைக் கொண்டவர்களாவர்.
1999 மக்கள்தொகை கணிப்பீடு:
- 83.36% கருப்பர்
- 7.28% வெள்ளையர்
- 5.38% கலப்பு
- 3.14% கிழக்கு இந்தியர்*
- 0.84% ஏனையவர்
* பிரித்தானியர், போர்த்துக்கல், சிரிய/லெபனீய.
இம்மண்டலத்தில் மக்கள் மறுசீரமைப்பு கிறிஸ்தவ சம்யத்தைப் பின்பற்றுபவர்களாவர். மெதடிஸ்ட்,(33%) அங்கிலிக்கன் (17%) உரோமன் கத்தோலிக்கம் (10%).
போக்குவரத்து
மண்டலம் சிறிய தீவுக் கூட்டத்தில் அமைந்துள்ளப்படியால் போக்குவரத்துவசதிகள் மட்டுப்படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. இங்கு மொத்தம் 113 கி.மீ. நீளமான பாதைகள் காணப்படுகின்றன. முக்கிய விமான நிலையம் ( பீஃப் விமானநிலையம் என்வும் அறியப்படும் டெரன்ஸ் பி. லெஸ்டோம் பன்நாட்டு விமான நிலையம்) டொர்டோலா தீவின் கிழக்கில் அமைந்துள்ள பீஃப் தீவில் அமைந்துள்ளது. வெர்ஜின் கோர்டா, அனேகோடா தீவுகளிலும் சிறிய விமான நிலையங்கள் காணப்படுகின்றன. முக்கிய துறைமுகம் ரோட் டவுணில் அமைந்துள்ளது.
இசை
பிரித்தானிய வெர்ஜின் திவுகளின் பாரம்பரிய இசைவடிவம் பங்கி என அழைக்கப்படுகிறது. ஆபிரிக்க ஐரோப்பிய இசை வடிவங்களின் இணைவு காரணமாக பங்கி இசை தனக்கேயுரிய சிறப்பான ஒலிகளைக் கொண்டுள்ளது. இது பாரம்பரிய நாட்டுக் கூத்து, மற்றும் வரலாறு மக்களிடையே கொண்டு செல்லப்படும் ஊடகமாக விளங்குகிறது. பங்கி இசை பாடசலைக் கல்வித் திட்டத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்விசையை வாசிக்கும் இசைக்குழுக்கள் ஸ்கெரெச் பாண்ட் என அழைக்கப்படுகின்றன.[12]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.