From Wikipedia, the free encyclopedia
இந்து சமய சாத்திரங்களான புராணங்களில் குறிப்பாக பிரம்ம புராணத்தில், மும்மூர்த்திகளில் ஒருவரும், படைப்புக் கடவுளுமான, நான்கு முகங்கள் கொண்ட பிரம்மாவின் இருப்பிடமாக பிரம்ம லோகம் எனும் சத்திய லோகம் குறிப்பிடுகிறது.
அதர்வண வேதத்தில் மேல் ஏழு லோகங்களில் ஒன்றாக பிரம்ம லோகம் குறித்த குறிப்புகள் உள்ளது. உபநிடதங்களில் பிரம்ம லோகம் பற்றிய குறிப்புகள் பல்வேறு இடங்களில் உள்ளது. அனைத்து புராணங்களிலும் படைப்புக் கடவுளான நான்முகன் எனும் பிரம்மா தனது துனைவியான சரசுவதியுடன் குடிகொண்டிருக்கும் பிரம்ம லோகம் எனும் சத்திய லோகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளது.
பௌத்த சாத்திரங்கள் வானுலகில் பிரம்ம லோகம் இருபத்தி ஒன்று சொர்க்கங்கள் கொண்டிருப்பதாக கூறுகிறது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.