From Wikipedia, the free encyclopedia
பிரகீத் எக்னலிகொட (Prageeth Eknaligoda) இலங்கையின் ஊடகவியலாளரும், கேலிச்சித்திர ஓவியரும் ஆவார். சுதந்திர ஊடக அமைப்பைச் சேர்ந்த இவர் லங்காநியூஸ்.கொம் இணையத்தளத்தின் ஊடகவியலாளராகப் பணியாற்றியவர்[1][2]. இவர் இலங்கை அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், 2010, சனவரி 24 ஆம் நாள் இரவு 08:30 மணியளவில் கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்துக் காணாமல் போனதாக முறையிடப்பட்டது[3] [4]. இவர் இலங்கை அரசு சார்பானவர்களால் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் நம்புகின்றனர், ஆனாலும் இதனை அரசாங்கள் மறுத்துள்ளது[4].
இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரகீத் முன்னொரு தடவையும் கடத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்[5]. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை மையப்படுத்தி "போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான இரகசியங்கள்' என்ற 40 நிமிட நேர ஆவணத் திரைப்படத்தைத் தயாரித்தவர்களில் இவரும் ஒருவர்.
எக்னலிகொட காணாமல் போன நிகழ்வை விளக்கி பன்னாட்டு மன்னிப்பு அவை அறிக்கை வெளியிட்டுள்ளது[6]. எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற அமைப்பும் இவரைப்பற்றித் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது[3]. கொழும்பு குற்றப்பதிவுத் திணைக்களம் எக்னலிகொட காணாமல் போனமை குறித்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது[7]. ஆனாலும் இவர் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.