பிணறாயி விஜயன்
இந்திய அரசியல்வாதியும் தற்போதைய கேரள முதல்வரும் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிணறாயி விஜயன் (Pinarayi Vijayan, மலையாளம்: പിണറായി വിജയൻ, பிறப்பு: 24 மே 1944) இந்திய அரசியல்வாதியும், கேரள மாநிலத்தின் முதலமைச்சரும் ஆவார்.[1][2] இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.
Remove ads
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
1944 ஆம் ஆண்டு மார்ச் இருபத்தொன்றாம் நாளில் கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பிணறாயி என்ற கிராமத்தில் பிறந்தவர்.[3]
அரசியல் வாழ்க்கை
இவர் 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். இவர் கேரள மாணவர் சங்கத்தின் (KSF) மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். அவர் கேரள வாலிபர் சங்கத்திலும் (KSYF) மாநிலத் தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இ. கே. நாயனார் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998 இல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பொறுப்புகளில்
- செயலாளர் மற்றும் தலைவர் -கேரள மாணவர் சங்கம்
- தலைவர் -கேரள வாலிபர் சங்கம்
- தலைவர் -கேரள கூட்டுறவு வங்கி
- கேரள சட்டமன்ற உறுப்பினராக 1970, 1977, 1991 மற்றும் 1996.
- கேரள மாநில அரசின் மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் 1996 - 1998.
- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு செயலாளர் 1998.
- இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் 2002 முதல்.
கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை
2007 மே 26 இல் பிணறாயி விஜயன், வி. எஸ். அச்சுதானந்தன் ஆகிய இருவரும் அரசியல் தலைமைக்குழுவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். இருவரும் கட்சியின் வரைமுறைகளை மீறி விமர்சித்துக் கொண்டதால் இடைநீக்கம் செய்ய இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு ஒப்புதல் அளித்தது. பின்னர் பிணறாயி விஜயன் மீண்டும் அரசியல் தலைமைக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[4]
Remove ads
லாவ்லின் ஊழல் வழக்கு
1998 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சியில் மின்துறை அமைச்சராக பிணறாயி விஜயன் இருந்தார். அப்போது, 3 நீர்மின் நிலையங்களை நவீனமயமாக்க கனடா நாட்டைச் சேர்ந்த எஸ். என். சி. லாவ்லின் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் அரசுக்கு ரூ. 374.50 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தப்படி மலபார் புற்றுநோய் மையத்துக்கு ரூ. 92.3 கோடியை அளிக்கவில்லை என்பதையும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.[5]
லாவ்லின் ஊழல் வழக்கிலிருந்து விடுதலை
லாவ்லின் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யப்பட்டு, ஓராண்டு ஆகியும், மத்திய புலனாய்வுத்துறைத் தரப்பில் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. இதையடுத்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிபதி, ஆர். ரகு தலைமையிலான சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் பிணறாயி விஜயன் மற்றும் ஐந்து பேரை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகத் தீர்ப்பளித்தது.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads