பாலின வாதம்
From Wikipedia, the free encyclopedia
பாலின வாதம் (Sexism) அல்லது பால்வாதம் அல்லது பாலினப் பாகுபாடு என்பது ஒருவரின் பால் அல்லது பாலின சார்ந்து முன்வெறுப்பு கொள்ளல் அல்லது பாகுபடுத்தல் ஆகும். பாலினவாதம் எவரையும் தாக்கலாம் என்றாலும் முதன்மையாக இது சிறுமிகளையும் மகளிரையும் தாக்குகிறது.பாலினவாதம் முதன்மையாக பெண்களுக்கு எதிரான பாகுபாட்டையே குறிக்கிறது என்பதிலும் எனவே பெண்களையே முதன்மையாக தாக்குகிறது என்பதிலும் பல்வேறு கல்விசார் புலங்களின் அறிஞரிடையே தெளிவான பொதுவேற்பு நிலவுகிறது.இக்கருத்தினம் மரபுவகைமைகளையும் பாலினப் பாத்திரங்களையும் மட்டுமே கருதுகிறது;[1][2] இந்நிலை ஒரு பாலினம் மற்றதை விட உயர்ந்தது எனக் கருதுகிறது.[3] முனைப்பான பாலின வாதம் பாலியல் வன்கொடுமை சார்ந்த வன்புணர்வுக்கும் பாலியல் துன்புறுத்தலுக்கும் வழிவகுக்கும்.[4] பாலினப் பாகுபாடு என்பது பாலின அடையாளம் அல்லது பால் அல்லது பாலின வேறுபாடுகள் சார்ந்து மக்கள்பால் கொள்ளும் பாகுபாடாகும்; இது பாலின வாதத்தை உள்ளடக்கலாம்[5][6] பாலினப் பாகுபாடு பணியிடச் சமனின்மையால் வரையறுக்கப்படுகிறது.[6] இது சமூக அல்லது பண்பாட்டு வழக்கங்களாலும் வரன்முறைகளாலும் உருவாகிறது.[7]
![Thumb](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/aa/Suffragette_arrest%2C_London%2C_1914.jpg/640px-Suffragette_arrest%2C_London%2C_1914.jpg)
வேர்ச்சொல்லியலும் வரையறைகளும்
பிரெடு ஆர். சாபிரோ கூற்றின்படி, "பாலின வாதம்" எனும் சொல் 1965 நவம்பர் 18 இல் பவுலின் எம். இலீத் என்பவரால் பிராங்ளின் – மார்ழ்சல் கல்லூரி ஆசிரியர் மாணவர் பேரவையில் உருவாக்கப்பட்டது.[8][9] குறிப்பாக, பாலின வாதம் எனும் சொல் அவரது பெண்களும் பட்டப்படிப்பும்" என்ற கட்டுரையில் கையாளப்பட்டது. இவர் இக்கருத்தினத்தை இனவாதத்தோடு ஒப்பிட்டு வரையறுக்கிறார் ( பக்கம் 3):): " சில பெண்களே நல்ல கவிதை இயற்ற வல்லவர்களாக உள்ளனர் என நீங்கள் வாதிடும்போது இனவாதிகளைப் போல ஒருபக்கச் சாய்வுடன் பெண்களை முற்றிலும் விலக்கிவைக்கும் பாங்கு உருவாகிட உங்களைப் பாலினவாதியாக அழைக்க வைக்கிறீர்கள், இனவாதிகளும் பாலின வாதிகளும் நடந்தவற்றை நடக்காதவை போல கருதுகிறீர்கள். எனவே மற்றவர் விழுமியம் சார்ந்த பொருந்தாத காரணிகளைக் கூறி, இந்த இருவகையினராகிய நீங்கள் முன்தீர்மானமிட்டு முடிவுகளும் எடுக்கிறீர்கள்."[8]
பாலின வாதம் ஒரு பாலினம் மற்ற பாலினத்தை விட உயர்ந்தது என்ற கருத்தியலின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.[10][11][12] இது பாலினம் சார்ந்து பெண்களிடம் பெண்குழந்தைகளிடமும் காட்டும் பாகுபாடு, முன்பகைமை,மரபுவகைமைக் கண்ணோட்டத்தைக் குறிக்கிறது.இது பெண்கள் மீதான வெறுப்பையும் அவர்கள்பால் காட்டும் முன்பகைமையையும் காட்டுகிறது .[13]
சமூகவியல் ஆய்வுகள் பாலின வாதம் தனியரிடமும் நிறுவன மட்டத்திலும் வெளிப் படுகிறதளெனக் கண்டுபிடித்துள்ளன.[10] சாபரின் கூற்றுப்படி, பாலின வாதம் அனைத்து பெருநிலைச் சமூக நிறுவனங்களிலும் நிலையாகப் பின்பற்றப்படுகிறது.[10] சமூகவியலாளர்கள் இதை இனவாத அடக்குமுறைக் கருத்தியலுடன் வைத்து ஒப்பிட்டு, இரண்டுமே தனியரிடமும் நிறுவன மட்டத்திலும் வெளிப் படுகிறதெனக் கூறுகின்றனர்.[14] தொடக்க காலப் பெண்னியச் சமூகவியலாளர்களாகிய சார்லட்டி பெர்கின்சு கில்மன், இடா பி. வெல்சு, ஆரியத் மார்த்தினியூ ஆகியோர் பாலினச் சமனின்மை அமைப்புகளைப் பற்றி விளக்கியுள்ளனரேதவிர, பாலின வாதம் என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை.ஈச்சொல் பின்னரே உருவானது. தால்கோட் பார்சன்சு போன்ற சமூகவியலாளர்கள் பாலின ஈருருவியப் படிமத்தால் பாலினச் சமனின்மை உருவாகிறது எனக் கூறினர்.[15]
உளவியலாளர்கள் ஆகிய மேரி கிராஃபோர்டும் உரோதா உங்கரும் பாலின வாதத்தைப் பெண்களைப் பற்றிய எதிர்மறை மனப்போக்குகள், விழுமியங்கள் உள்ளடங்கிய தனியர்களின் முன்முடிபின் வடிவமாக வரையறுக்கின்றனர்.[16]பீட்டர் கிளிக்கும் சுசான் பிசுக்கேவும் இருசார்பு பாலின வாதம் என்ற சொல்லை உருவாக்கினர் இக்கருத்தினம் எப்படி பெண்கள் சார்ந்த மரபுவகைமைகளைத் தனியர்கள் நேர்நிலையாகவும் எதிர்மறையாகவும் பிரித்து தீங்கான பாலின வாதமாகவும் நலம்தரும் பாலின வாதமாகவும் மாற்ருகின்றனர் என்பதை விளக்குகிறது.[17]
பெண்ணிய ஆசிரியரான பெல் கூக்சு பெண்களுக்குத் தீங்குகளை விளைவிக்கும் அடக்குமுறை அமைப்பாகப் பாலின வாதத்தை வரையறுக்கிறார்.[18]பெண்ணிய மெய்யியலாளரான மாரிலின் பிறை பாலின வாதத்தை ஆண்மேம்பாட்டு அடக்குமுறையாளர்களின் பெண்மறுப்பியல் "மனப்போக்கும் அறிதலும் சார்ந்த ஒருசாய்புநிலைச் சிக்கலாக" வரையறுக்கிறார்.[19]
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.