From Wikipedia, the free encyclopedia
பார்தோலோமியசு ஜான் "பார்ட்" போக் (Bartholomeus Jan "Bart" Bok) (ஏப்பிரல் 28, 1906 – ஆகத்து 5, 1983) ஒரு டச்சு-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பால்வழி பால்வெளியின் கட்டமைப்பையும் படிமலர்ச்சியையும் பற்றிய ஆய்வுக்காகவும் போக் உருண்டைகளின் கண்டுபிப்புக்காகவும் பெயர்பெற்றவர் . போக் உருண்டைகள் சிறிய அடர்ந்த பொலிந்த பின்னணியில் காணப்படும் உடுக்கண இடைவெளியில் அமையும் கருமுகில்களாகும். விண்மீன்கள் உருவாகும் முன்பு சுருங்கிவரும் உருண்டைகளாகும் எனக் கூறினார்.
பார்ட் போக் | |
---|---|
பார்ட் போக் (1906–1983) கடைசி ஆண்டில், 1983. | |
பிறப்பு | பார்தோலோமியசு ஜான் போக் 1906|4|28 கூர்ன், நெதர்லாந்து |
இறப்பு | 1983|8|5|1906|4|28 தக்சன், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கர் |
தேசியம் | டச்சு-அமெரிக்கர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | இலெய்டன்; குரோனிங்கன் |
அறியப்படுவது | பால்வழி; போக் உருண்டைகள் |
துணைவர் | பிரிசுசில்லா பேர்பீல்டு போக் |
பிள்ளைகள் | ஜாய்சு, ஜான் |
போக் தன்னுடன் பணிசெய்த முனைவர் பிரிசுசில்லா பேர்பீல்டு அவர்களை 1921 இல் மணந்தார். பின்னர் இருவரும் தம் கடைசி வாழ்நாள் வரை வானியலில் கூட்டாகப் பணிபுரிந்தனர். இதைப் பற்றி அரசு வானியல் கழகம் இக்காலத்தில் இருந்து இருவருடைய பணிகளையும் பிரித்தறிய இயலாதெனக் கூறுகிறது.[1] இருவரும் அத்தகைய இணைபிரியாத ஆர்வத்தை வானியலை மக்களுக்கு எடுத்துரைப்பதில் கொண்டிருந்தனர் . போசுடன் குழுமம் 1936 இல் இவர்களை "பால்வழியின் விற்பனையாளர்கள்" என விவரித்த்து.[2](p44)இவர்கள் ஒன்றாக ஆய்வு செய்து ஒன்றாகவே ஆய்வுக் கட்டுரைகளை எழுதினர். அவர்களது பொது ஆர்வ நூலான பால்வழி எனும் நூல் ஐந்து பதிப்புகளைக் கண்டது. இது பரவலாக மிகவும் பாராட்டப்பட்ட வெற்றிகண்ட வானியல் நூலாகும்.[3]
போக்கின் முதன்மை ஆய்வு ஆர்வம் நம் பால்வழி பற்றியே அமைந்தது.[4] When he was asked by the editors of அமெரிக்காவில் யார் எவர் நூலின் பதிப்பாளர்கள் "என் வாழ்வின் எண்ணங்கள்"பற்றிய கூற்றைக் கேட்டபோது, இவர், "நான் நமது அழகிய பால்வழியின் நெடுஞ்சாலையிலும் குறுக்குச் சாலையிலும் இன்பமாக அறுபது ஆண்டுகள் திரிந்தலைந்த ஒரு மகிழ்ச்சியான வானியலாளன் ஆவேன்." எனக் கூறியுள்ளார்.[5]
இவர் வானியலில் தன் இணக்கத்துக்கும் நகைச்சுவைக்கும் மிகவும் பெயர்பெற்ற ஆளுமை ஆகும். குறுங்கோள் 1983 போக் இவரது பெயரும் மனைவியின் பெயரும் இட்டபோது, இவர் பன்னாட்டு வானியல் கழகத்தைப் பின்வருமாறு நன்றி பாராட்டினார். "நாங்கள் ஓய்வுபெற்றதும் என்றும் வாழ்வதற்கான சின்ன்ஞ்சிறு மனையது" என உருவகமாக்க் கூறியுள்ளார்."[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.