இந்திய விடுதலைப் போராட்டம் From Wikipedia, the free encyclopedia
பாரத மாதா கோயில், (Bharat Mata Mandir) (இந்தி: भारत माता मंदिर, Mother India Temple)உத்திரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி மாவட்டத்தில் உள்ள காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருஉருவச்சிலைக்கு பதிலாக, அகண்ட பிளவு படாத விடுதலைக்கு முந்திய பாரத நாட்டின் வரைபடத்தை பளிங்கு கல்லால் செதுக்கப்பட்டு, அதனை பாரத மாதாவாக வணங்கப்படுகிறது.[1][2][3][4][5][6]
பாரத மாதா கோயில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | உத்திரப்பிரதேசம் |
மாவட்டம்: | வாரணாசி |
அமைவு: | மகாத்மா காந்தி காசி வித்யாபீடம், வாரணாசி |
ஏற்றம்: | 83.67 m (275 அடி) |
கோயில் தகவல்கள் | |
சிறப்பு திருவிழாக்கள்: | இந்திய விடுதலை நாள் இந்தியக் குடியரசு நாள் |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | 1936 |
அமைத்தவர்: | சிவபிரசாத் குப்தா |
இணையதளம்: | http://bharatmatamandir.in/ |
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சிவபிரசாத் குப்தா என்பவரின் முயற்சியால் 1936ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாரத மாதா கோயிலை, மகாத்மா காந்தி திறந்து வைத்தார்.[1][2]
வாரணாசி தொடருந்து நிலையத்திலிருந்து 1.5 கி. மீ., தொலைவில், காசி வித்யாபீட வளாகத்தில் அமைந்துள்ளது.[7]
Seamless Wikipedia browsing. On steroids.