பழனி திகாம்பரம்

From Wikipedia, the free encyclopedia

பழனி திகாம்பரம்

எஸ். உடையப்பன் பழனி அழகன் திகாம்பரம் (S. Udeiappan Palani Alagan Digambaram, பிறப்பு: 10 சனவரி 1967)[1] என்பவர் இலங்கை அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தொழிலதிபரும் ஆவார்.

விரைவான உண்மைகள் பழனி திகாம்பரம்Palani Digambaramநா.உ. மா.ச.உ., மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ...
பழனி திகாம்பரம்
Palani Digambaram
Thumb
மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்
பதவியில்
4 செப்டம்பர் 2015  2020
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர்
பதவியில்
12 சனவரி 2015  ஆகத்து 2015
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்
பதவியில்
21 ஆகத்து 2014  10 டிசம்பர் 2014
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2004–2010
பின்னவர்ஜி. எம். எம். பியசிறி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சனவரி 1967 (1967-01-10) (அகவை 58)
அரசியல் கட்சிதொழிலாளர் தேசிய சங்கம்
சமயம்இந்து
இனம்மலையகத் தமிழர்
மூடு

திகாம்பரம் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரும், தொழிலாளர் தேசிய சங்கம் என்ற தொழிற்சங்கத்தின் தலைவரும் ஆவார்.[2][3]

திகாம்பரம் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு மத்திய மாகாண சபைக்குத் தெரிவானார்.[4] இவர் 2009 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[6][7] தேசியப் பட்டியல் தொடர்பாக ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக திகாம்பரம் அக்கூட்டணியில் இருந்து 2010 ஏப்ரல் 22 இல் விலகினார்.[8] திகாம்பரம் பின்னர் எக்கூட்டணியிலும் சேராமல் சுயேட்சையாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினராகத் தொடர்ந்திருந்தார்.[9]

2014 ஆகத்து 21 இல் இவர் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10][11] பின்னர் 2014 டிசம்பர் 10 இல் ஆளும் கூட்டணியில் இருந்து விலகி 2-015 அரசுதலைவர் தேர்தலில் பொது எதிர்க்கட்சி வேட்பாளராகப் போட்டியிடும் மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.[12][13] தேர்தலின் பின்னர் புதிய அரசுத்தலைவர் சிறிசேன இவரை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக நியமித்தார்.[14][15]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு 105,528 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[16][17][18] 2015 செப்டம்பர் 4 அன்று மைத்திரிபால சிறிசேனவின் அரசில் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[19][20] [21]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.