From Wikipedia, the free encyclopedia
பத்திரை என்பவள், கண்ணனின் எண்மனையாட்டிகளில் ஒருத்தியாகச் சொல்லப்படுகின்றாள். எண்மரில் இவள் ஏழாவது ஆவாள். இவள் வரலாறு, மகாபாரதம், பாகவதம், விஷ்ணு புராணம், அரிவம்சம், முதலியவற்றில் சொல்லப்படுகின்றது.[1]
கேகய நாட்டின் இளவரசி என்பதால், இவள் கைகேயி எனப்படுகின்றாள். திருட்டகேது மற்றும் குந்தியின் சகோதரியான சுருதகீர்த்தி ஆகியோரின் மகள் இவள்.[2][3] மணத்தன்னேற்பில் இவள் கண்ணனைத் தன் நாயகனாக வரித்துக் கொண்டாள்.[4]
சங்கிராமசித்து, பிருகச்சேனன், சூரன், பிராகரணன், ஆர்சித்து, சயன், சுபத்திரன், வாமன், ஆயுர், சத்தியகன் என மித்திரவிந்தைக்குப் பத்து மைந்தர் என்கின்றது பாகவதம்[5][6] கண்ணனின் மறைவுக்குப் பின், அவனது ஏனைய தேவியர் போலவே இவளும் உடன்கட்டையேறித் தன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.[7] [8]
"பத்திரா கல்யாணம்" என்னும் நூல் தெலுங்கில், கலாநிதி.கே..வி.கிருஷ்ணகுமாரி என்பவரால் இயற்றப்பட்டுள்ளது. பத்திரையின் அழகு, காதல், அவளுக்கும் கண்ணனுக்கும் நடந்த திருமணம் என்பவற்றை அந்நூல் அழகுற வர்ணிக்கின்றது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.