தனா இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
படை வீரன் 2018 ஆண்டைய ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். தனா எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், அகில், அம்ரிதா ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்த இத்திரைப்படம் 2018 பெப்ரவரி 2 அன்று வெளியானது.
படை வீரன் | |
---|---|
இயக்கம் | தனா |
தயாரிப்பு | மதிவாணன் |
கதை | தனா |
இசை | கார்த்திக் ராஜா |
நடிப்பு | விஜய் யேசுதாஸ் பாரதிராஜா அகில் அம்ரிதா |
ஒளிப்பதிவு | இராசவேல் மோகன் |
படத்தொகுப்பு | புவன் சீனிவாசன் |
கலையகம் | எவோக் |
வெளியீடு | 2 பெப்ரவரி 2018 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மணிரத்தினத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய தனாவின் இயக்கத்தில் 2016 மே மாதத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில்விஜய் யேசுதாஸ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
Seamless Wikipedia browsing. On steroids.