From Wikipedia, the free encyclopedia
படைசார் பொறியியல் (Military engineering)என்பது படைப்பணிகளின் வடிவமைப்பு, கட்டுமானக் கலை, அறிவியல், நடைமுறையும் படைசார்ந்த போக்குவரத்து, தொடர்புகளின் பேணுதலும் என வரையறுக்கப்படுகிறது. படைசார் பொறியாளர்கள் படைத்தந்திரங்களைச் சார்ந்த ஏரணவியலிலும் அதுசார் ஊர்தி இயக்கத்திலும் வல்லவர்களாகத் திகழவேண்டும். புத்தியல் படைசார் பொறியியல் குடிசார் பொறியியலில் இருந்து வேறுபட்டதாகும். படைசர் பொறியியல் 20 ஆம், 21 ஆம் நூற்றாண்டுகளில் எந்திர, மின் பொறியியல் புலங்களின் நுட்பங்களையும் உள்ளடக்கியதாகும்.[1]
நாட்டோவின் வரையறையின்படி, "படைசார் பொறியியல் என்பது உறுப்புவகையையோ பணிவகையையோ சாராமல், தகுந்த போர்ப்புறநிலை இயக்கச் சூழலை உருவாக்க மேற்கொள்ளும் பொறியியல் பணியாகும். இவர் போர் நடத்துதலோடு ஒட்துமொத்தப் படைக்கும் உரிய ஆதரவைத் தருகிறார், இதில் படைக் காப்பு ஆதரவு, புது எதிர்ப்பு வெடிப்புக் கருவிகளைப் புனைதல்,சுற்ருச்சூழல் பாதுகாப்பு, பொறியாளர் மதிநுட்பச் செயல்பாடு, படைநட்த்தல் சார்ந்த தொடர்தேட்டம் ஆகியன அடங்கும். இவர் ஊர்திகள்,போர்க்கலங்கள்,வானூர்தி, படை ஆயுதங்கள், பிற கருவிகள் ஆகியவற்ரின் இயக்குதல், பேணுதல், பழுதுபார்த்தல் ஆகிய பிற பொறியாளர்கள் செய்யும் பணிகளைச் செய்வதில்லை."[2]
படைசார் பொறியியல் படைசார் கல்விக்கழகங்களிலோ படைசார் பொறியியல் பள்ளிகளிலோ பயிற்றுவிக்கப்படும் கல்விசார் பாட்த் திட்டமாகும். படைசர் பொறியியலுக்கான கட்டுமானமும் அழிப்பும் படைசார் பொறியாளராலோ அல்லது பயிற்சிபெற்ற படைவீரர்களாலோ படைசார் முன்னணியாலோ செய்யப்படும்.[3] புத்தியல் படைகளில் படைவீரரே முண்னணியில் இருந்துகொண்டே செய்ய பயிற்சி அளிக்கப்படுகின்றனர். இவர்கள் போராட்டப் பொறியாளர்கள் எனப்படுகின்றனர்.
சில நாடுகளில் அமைதிக் காலத்தில் படைசார் பொறியாளர்களே படை சாராது வெள்ளப் பெருக்குக் கட்டுபாடு, ஆற்றுப் பயணப் போக்குவரத்து போன்ற ஆக்கப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆனால், இவை படைசார் பொறியியலில் உள்ளடங்காது.
போர் தொடர்பில் தான் முதன்முதலில்பொறியாளர் எனும் சொல் 1325 இல் பயன்படுத்த்ப்ப்பட்டது. அப்போது பொறி,ஆளர் (பொறியை இயக்குபவர் என்ற பொருளில்) பயன்படுத்தப்பட்டது. இவர் படைசார் பொறியைக் கட்டியமைத்தார்.[4] இந்த சூழலில் பொறி என்பது படைசார் எந்திரத்தையே குறித்தது அதாவது எந்திர ஆயுதத்தைக் (எடுத்துத்துகாட்டாக, கவண்( catapult) குறித்தது.
பாலங்கள், கட்டிடங்கள் போன்ற பொதுமக்களுக்கான கட்டமைப்புகளை உருவாக்கும் தொழில்நுட்பப் புலமாக தோன்றிய குடிசார் பொறியியல்[5] அகரமுதலியில் இடம்பிடித்தது. படைசாராத திட்டங்களையும் பழைய தொழில்நுட்பங்களையும் தனிபடுத்திக் காட்டவே இச்சொல் வழக்கில் வந்தது. படைச் சூழலில் பயன்பட்ட பொறியியல் சொல்லைப் பொதுவாக்கி, அதில் இருந்த பல புலங்கள் மேலும் பிரிய வழிவகுத்தது. முதலில் பொறியியல் என்பதே படைசார் பொறியியலை மட்டுமே குறித்தமை இப்போது வழக்கிறந்தது. அதன் இடத்தை இப்போது படைசார் பொறியியல் பிடித்துக்கொண்டது.
புத்தியல் படைசார் பொறியியலை மூன்று புலங்களாகப் பிரிக்கலாம்.அவை, போர்க்களப் பொறியியல், போர்த்தந்திர ஆதரவு, துணைநிலை ஆதரவு என்பனவாகும்.போர்க்களப் பொறியியல் போர்க்களத்தில் போரிடப் பயன்படும் பொறியியலாகும். போர்க்களப் பொறியாளர்கள் பள்லம் தோண்டல், தற்காலிக ஏந்துகளைக் கட்டல் போன்ற போர்க்களப் பணிகளில் ஈடுபட்டு முன்னணிப் படையின் முன்னேற்ற வேகத்தைக் கூட்டும் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர். பொர்த்தந்திர ஆதரவு என்பது தொடர்பாலுக்கான ஆதரவாகும். இதில் விமானதளங்கள் கட்டல், துறைமுக ஏந்துகளை மேம்படுத்தலும் தரம் உயர்த்தலும் நெடுஞ்சாலைகள், தொடர்வண்டித்தடங்கல் ஆகியவற்றை உருவாக்கலும் மேம்படுத்தலும் அடங்கும். துணைநிலை ஆதரவில் உரிய நிலப்படங்களை வழங்கலும் தேவையற்ர போர்க்கருவிகள் அப்புறப்படுத்தலும் அடங்கும். படைசார் பொறியாளர்கள் விமானதளங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், தொடர்வண்டித்தடங்கள், மருத்துவ மனைகள் ஆகியவற்றைக் கட்டுவர். அமைதிக் காலத்தில் பொதுப்பணி திட்டங்களைக் கட்டி குடிசார் பொறியாளரின் பணிகளை மேற்கொள்வர். இக்காலத்தில் இவர்கள் போர்த்தந்திரத்திலும் போர் ஆயத்தப் பணிகளிலும் ஈடுபடுகின்றன.[1]
படைசார் பொறியியல் வல்லுனர்களை முதலில் பயன்படுத்திய உரோமர்களே. இவர்களது படையில் படைசார் பொறியாளர்கள் எனப்படும் தனியான படையணியே விளங்கியது. இப்படை அவர்களது சம காலத்தில் மிகவும் பெயர்பெற்றதாகும்.
நாட்டோ படைசார் உயர்தகவு பொறியியல் மையம் (MilEng CoE) செருமனை, இங்கோல்சுதாதில் செருமனி படையின் படைசார் பொறியியல் பள்ளி. இது NATO CoE ஆகும் முன்பு, ஐரோப்பிய நாட்டோ பயிற்சிப் பொறியாளர் மையம் (ENTEC) எனப்ப்பட்டது. அப்போது இது மூனிச்சில் இருந்த்து. ENTEC ஆக இருந்தபோது, பங்கேற்கும் நாடுகளுக்கு படைசார் பொறியியல் பயிற்சிதரும் அமைப்பாக விளங்கியது. MilEng CoE ஆக மாறியதும், இது படைசார் பொறியியலின் நெறிமுறைகலை வகுக்கவும் நாட்டோ செந்தரப்பாட்டு ஒப்பந்தங்களை உருவாக்கவும் அதிகாரம் படைத்ததாகியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.