படுக மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென்திராவிட மொழி ஆகும். இம்மொழியைத் தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும், ஏறத்தாழ 250,000 படகர் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி நாவளை உயிர் ஒலிகளைக் கொண்டுள்ளதால், மொழியியல் ஆர்வலர்கள் இதனைச் சிறப்பாக அறிவார்கள்.

விரைவான உண்மைகள் படுக மொழி, நாடு(கள்) ...
படுக மொழி
நாடு(கள்)இந்தியா
பிராந்தியம்தமிழ்நாடு - நீலகிரி
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
250,000  (date missing)
திராவிடம்
தமிழ் எழுத்து
மொழிக் குறியீடுகள்
ISO 639-2dra
ISO 639-3bfq
மூடு

படகு மொழியைப் பிற மொழியினர் படகா என்றும் அழைப்பதுண்டு. படுக மொழியில் இதனைப் பேசும் இனக்குழுவினரைப் படுகு அல்லது படுகுரு என அழைப்பர். இம்மொழி இதுவரை எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை. தமிழ், கன்னடம், அல்லது ஆங்கில எழுத்துகளில் எந்த எழுத்துவடிவத்தைக் கொண்டு எழுதுவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், பெரும்பான்மையினர் தமிழ் எழுத்துகளைக் கொண்டே இம்மொழியினை எழுதி வருகின்றனர். மலாய் மொழி போன்று ஆங்கில(இலத்தீன்) வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம் என சிலரும் தமிழ் எழுத்துகளிலேயே தொடரலாம் என சிலரும் கூறுகின்றனர்.[1]

படுக விக்கிப்பீடியா

படுக மொழியில் கலைக்களஞ்சியம் உருவாக்கும் நோக்கில் விக்கிமீடியா நிறுவனம் படுக விக்கிப்பீடியா என்னும் சோதனை திட்டத்தைத் தொடங்கியுள்ளது.[2]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.