சென்னையிலுள்ள கலை அறிவியல் கல்லூரி From Wikipedia, the free encyclopedia
பச்சையப்பன் கல்லூரி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள ஓர் மிகத் தொன்மையான கல்லூரி ஆகும். இக்கல்லூரி பச்சையப்ப முதலியார் இறப்பிற்கு பிறகு, அவரது உயிலில் வரைந்திருந்தபடி, அறச்செயல்களுக்காக அவர் ஒதுக்கியிருந்த தொகையினைக் கொண்டு பிராட்வேயிலிருந்த பச்சையப்பன் நடுவ நிறுவனத்தால் (Pachaiyappa's Central Institution) சனவரி 1,1842 அன்று நிறுவப்பட்டது. இது தென்னிந்தியாவில் பிரித்தானியரின் நிதியுதவியின்றி நிறுவப்பட்ட முதல் சைவ மத நிலையமாக விளங்கியது.1889ஆம் ஆண்டு கல்லூரியாக தகுதி பெற்றது. 1947 ஆம் ஆண்டுவரை இந்திய மாணவர்களை மட்டுமே சேர்த்து வந்தது. இன்று அனைத்து மாநில, மாவட்ட மாணவர்களும் இந்தக் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
பச்சையப்ப முதலியார் காஞ்சிபுரம் மாவட்டம், பெரியபாளையத்தில், 1754 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது தந்தை காஞ்சிபுரம் விசுவநாத முதலியார் மற்றும் தாய் பூச்சி அம்மாள் ஆவார். இவர் அகமுடைய வெள்ளாளர் (துளுவ வெள்ளாளர் முதலியார்) சமூகத்தை சேர்ந்தவர் ஆவார்.[2][3] பச்சையப்பரின் பிறப்பிற்கு சில தினங்களுக்கு முன்பே இவரின் தந்தை காலமாகிவிட்டார். பின்பு இவரின் தாயார் ஐந்தே வயது நிரம்பிய பச்சையப்பரையும் அவரின் இரு சகோதரிகளையும் அழைத்துக்கொண்டு, சென்னையை அடைந்து, சாமி மேஸ்திரி தெருவில் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில் ஆங்கில வணிகர்களுக்கு மொழி பெயர்ப்பாளராய் விளங்கிய நாராயணப் பிள்ளை என்ற செல்வரிடம் அடைக்கலம் புகுந்தார். நாராயணப்பிள்ளை இவரை உடன் பிறந்தாளைப் போல் போற்றி, பச்சையப்பருக்கு கணக்கு, கடிதத் தொடர்பு போன்றவற்றில் பயிற்சியும் ஆங்கில அறிவைப் பெறவும் உதவினார். பச்சையப்பர் தமது தன்னம்பிக்கை கொண்டே 22 வயதில் பெரும் நிதியாளராகவும் வணிகமேதையாகவும் திகழ்ந்தார். இவர் தமது சொத்துக்கள் அனைத்தையும் இறைவனுக்கும், மனிதத்திற்கும் அர்ப்பணித்தார். இவர் 1794ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று கும்பகோணத்தில் இருந்தபோது தனது மரணம் குறித்து ஓர் முன்னறிவிப்பைப் பெற்று தமது உயிலை எழுதினார். இவரது உயில் வாசகம்:
“dedicating, with full knowledge and hearty resignation, all his wealth, in the absence of any male issue, to the sacred service of Siva and Vishnu and to certain charities at various temples and places of pilgrimage, to the erection of religious edifies, to bounties to the poor, to seminaries of Sanskrit learning and to other objects of general benevolence”.
இவரது உயிலைப் பராமரித்தவர்கள் சரியான முறையில் அதனை செலவழிக்காததால் உயர்நீதிமன்றம் தானே அறக்கட்டளை நிதியான மூன்றரை இலக்கம் ரூபாய் பெறுமான சொத்துக்களை அகப்படுத்திக் கொண்ட பின்னர் ஏழரை இலக்கமாக உயர்ந்தது. மூன்றரை இலக்கத்தை கோவில் திருப்பணிகளுக்குக் கொடுத்துவிட்டு மீதமுள்ளதில் இவர் பெயரில் கல்விச்சேவைகள் துவங்க பயன்படுத்தியது.[1]
இந்தத் தொன்மையான கல்லூரியிலிருந்து பல முன்னாள் மாணவர்கள் அறிஞர்களாகவும், அரசியல்வாதிகளாகவும் பொது சேவை அதிகாரிகளாகவும், வணிகப்பெருமக்களாகவும் புகழ் பெற்றுள்ளனர். முன்னாள் மாணவர்களின் முழுமையான பட்டியல் அவர்களது தளத்தில் உள்ளது[5]. இவர்களில் சிலர்:
Seamless Wikipedia browsing. On steroids.