நேனித்து தன்னாட்சி வட்டாரம் ( Nenets Autonomous Okrug[9] உருசியம்: Не́нецкий автоно́мный о́круг; Nenets: Ненёцие автономной ӈокрук, Nenyotse avtonomnoy ŋokruk) எனப்படுவது ரஷ்ய கூட்டாட்சி அமைப்பைச் சேர்ந்த (தன்னாட்சி பிராந்தியம் ) இதன் நிர்வாக மையம் நார்யன்-மார். இந்தப் பிராந்தியத்தின் பரப்பளவு 176,700 சதுர கிலோ மீட்டர் (68,200 சதுர மைல்) மக்கள் தொகை 42,090 ( 2010 கணக்கெடுப்பு ) [5] உருசியாவின் தன்னாட்சி பிராந்தியங்களில் குறைந்த மக்கள் தொகை கொண்டது இந்தப் பிராந்தியம்.

விரைவான உண்மைகள் நேனித்து தன்னாட்சி வட்டாரம்Nenets Autonomous Okrug, நாடு ...
நேனித்து தன்னாட்சி வட்டாரம்
Nenets Autonomous Okrug
தன்னாட்சி வட்டாரம்
Ненецкий автономный округ
Thumb
கொடி
Thumb
சின்னம்
Thumb
நாடு உருசியா
நடுவண் மாவட்டம்வடமேற்கு[1]
பொருளாதாரப் பகுதிவடக்கத்திய[2]
நிர்வாக மையம்நர்யான்-மார்
அரசு
  நிர்வாகம்Assembly of Deputies
  ஆளுநர்லோகர் கோசின்[3]
பரப்பளவு
  மொத்தம்1,76,700 km2 (68,200 sq mi)
  பரப்பளவு தரவரிசை20வது
மக்கள்தொகை
 (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5]
  மொத்தம்42,090
  மதிப்பீடு 
(2018)[6]
43,997 (+4.5%)
  தரவரிசை83வது
  அடர்த்தி0.24/km2 (0.62/sq mi)
  நகர்ப்புறம்
67.8%
  நாட்டுப்புறம்
32.2%
நேர வலயம்ஒசநே+3 ([7])
ஐஎசுஓ 3166 குறியீடுRU-NEN
அனுமதி இலக்கத்தகடு83
OKTMO ஐடி11800000
அலுவல் மொழிகள்உருசியம்[8]
இணையதளம்http://www.adm-nao.ru/
மூடு

நிலவியல்

இந்தப் பகுதி ஆர்க்டிக் சூழலியலைக் கொண்ட கடும் வெப்பநிலையும் தனிப்பட்ட நிலவியலும் கொண்டு, பிராந்தியம் தனிப்பட்ட அம்சங்களுடன் உள்ளது. இந்தப் பிராந்தியத்தில் பனிக்கரடிகள் காணப்படுகின்றன. இந்தத் தன்னாட்சிப் பிராந்தியம் சுமார் 177,000 சதுர கிமீ பரப்பளவு கொண்டுள்ளது,[10] இது சுவிச்சர்லாந்தைவிட பரப்பளவில் நான்கு மடங்கு பெரியதாகும். வடக்கில் இருந்து தெற்காக 320 கி.மீட்டரும், கிழக்கில் இருந்து மேற்காக 950 கி.மீ. உள்ளது.

பொருளாதாரம்

இதன் பொருளாதாரம் மொத்த பிராந்தியத்தின் தொழில்களில் 99% எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்தலை அடிப்படையாக உள்ளது.[11] பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் தொழில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (2001 ஆம் ஆண்டு) 65% வகித்தது, ஆனால் 2005 ஆம் ஆண்டு 80% என்று வளர்ச்சி கண்டது.[12]

மக்கள் வகைப்பாடு

பிராந்தியத்தின் மக்கள் தொகை விவரம்: 42,090 ( 2010 கணக்கெடுப்பு ); 41,546 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 54,840 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)

  • இன குழுக்கள் விகிதாச்சாரம்
  • 2010 கணக்கெடுப்பின்படி கீழ்கண்டவாறு இனக் கலவை இருந்தது:[5]
  • உருசியர்கள் : 66.1%
  • நினித்ஸ் : 18.6%
  • கோமி மக்கள்: 9%
  • மற்றவர்கள்: 6.3%

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.