From Wikipedia, the free encyclopedia
நூரிஸ்தான் மாகாணம், ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் ஒன்று. இது ஏழு மாவட்டங்களை உள்ளடக்கியது. இங்கு ஏறத்தாழ 140,900 மக்கள் வசிக்கின்றனர்.[2] இந்த மாகாணத்தின் தலைநகராக பருன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
நூரிஸ்தான்
Nuristan نورستان | |
---|---|
நூரிஸ்தான் மாகாணம் தனித்துக் காட்டப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானின் நிலவரைபடம் | |
நாடு | ஆப்கானித்தான் |
மாகாணத் தலைநகரம் | பருன் |
அரசு | |
• ஆளுநர் | ஹஃபீஸ் அப்துல் கையாம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9,225.0 km2 (3,561.8 sq mi) |
மக்கள்தொகை (2015)[1] | |
• மொத்தம் | 1,47,692 |
• அடர்த்தி | 16/km2 (41/sq mi) |
நேர வலயம் | GMT+4:30 |
ஐஎசுஓ 3166 குறியீடு | AF-NUR |
மொழி | நூரிஸ்தானி மொழி |
இந்த மாகாண நிலப்பரப்பு முன்னர் காபீரிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. 1895ஆம் ஆண்டுவாக்கில் இங்கு வாழ்ந்த இந்து மக்கள் இசுலாம் சமயத்தை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டன. அப்போதில் இருந்து இந்த மாகாணம் நூரிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்த சொல்லுக்கு ஒளி மிகுந்த நிலம் என்று பொருள்.[3]
2013ஆம் கணக்கெடுப்பில் உள்ள விவரங்களின்படி, இங்கு 140,900 மக்கள் வசிக்கின்றனர்.[2] இவர்களில் 99.3% மக்கள் நூரிஸ்தானி இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 0.6 சதவீத மக்கள் பஷ்தூன் மக்கள் ஆவர்.[4][5]
90% மக்கள் நூரிஸ்தானி மொழியில் பேசுகின்றனர்.[6]
பஷ்தூ மொழியும், பாரசீகமும் முறையே இரண்டாவது, மூன்றாவது மொழிகளாகப் பயன்பாட்டில் உள்ளன.
இந்த மாகாணத்தில் ஏழு மாவட்டங்கள் உள்ளன.[7] அவை பர்கி மட்டால் மாவட்டம், து அப் மாவட்டம், காம்தேஷ் மாவட்டம், மண்டோல் மாவட்டம், நூர்கிராம் மாவட்டம், பருன் மாவட்டம், வாமா மாவட்டம், வேகல் மாவட்டம் ஆகியன.
இந்த மாகாணத்தின் தற்போதைய் ஆளுநர் ஹபீஸ் அப்துல் கயாம் ஆவார்.[8] இவருக்கு முன்னர் பதவியில் இருந்த ஜமாலுதீன் பதர் என்பவர் அரசியல் ஊழல் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்..[9] இந்த மாகாணத்தின் தலைநகரமாக பருன் விளங்குகிறது.
இந்த மாகாணத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு ஆப்கான் தேசிய காவல்படையினரைச் சேரும். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்துடன் எல்லையை பகிர்ந்துள்ளதால், எல்லைப் பகுதியில் ஆப்கன் எல்லைப் பாதுகாப்புப் படையினர் காவலில் ஈடுபடுவர். ஆப்கான் உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியாக மாகாணத்துக்கு காவல் தலைவர் நியமிக்கப்படுகிறார். இவர் இரு காவல் படையினருக்கும் கட்டளைகள் இடுவார்.
2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இங்கு வாழ்வோரில் 17 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருப்பது தெரிய வந்தது.[10] 2011ஆம் ஆண்டில், குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் விகிதம் 45 சதவீதமாக இருந்தது.[10]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.