From Wikipedia, the free encyclopedia
நுரை அல்லது செம்பூவம் [3] (Longan; Dimocarpus longan) என்பது உண்ணத்தக்க பழங்களைத் தரக் கூடிய ஒரு அயனமண்டல தாவரம் ஆகும். இது சபின்டேசியே (Sapindaceae) குடும்பத்தைச் சேர்ந்தது.
நுரை | |
---|---|
நுரைப்பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Sapindales |
குடும்பம்: | Sapindaceae |
பேரினம்: | Dimocarpus |
இனம்: | D. longan |
இருசொற் பெயரீடு | |
Dimocarpus longan Lour.[2] | |
வேறு பெயர்கள் [2] | |
|
நுரை மரம் என்றும் பசுமையாகக் காணப்படும் இடைத்தர உயரமுள்ள மரம் ஆகும். இது சுமார் 6 மீட்டர்கள் (20 அடி) முதல் 7 மீட்டர்கள் (23 அடி) வரையான உயரத்தில் வளரக் கூடியது. மணல் பாங்கான தரையில் வளரக் கூடியது. இது 4.5 °C (40 °F) வரையான வெப்பநிலையில் சிறப்பாக வளரக் கூடியது. சுமார்−2 °C (28 °F) அளவு வரையான வெப்பநிலை மாற்றத்தைத் தாங்கும்.[4]
மியன்மாருக்கும் தெற்கு சீனாவுக்குமிடையிலான மலைத்தொடர்களில் இது உற்பத்தியானதாக நம்பப்படுகின்றது. மற்றொரு அறிக்கையின்படி இந்தியா, இலங்கை, உயர் மியன்மார், வட தாய்லாந்து, கம்போடியா, வடக்கு வியட்நாம் மற்றும் நியூ கினி ஆகியவற்றில் தோற்றம் பெற்றதாக அறியப்படுகிறது. .[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.