From Wikipedia, the free encyclopedia
நுகர்ச்சியுயிரி (Olfactores) என்பது முதுகுநாணி தொகுதியில் உள்ள ஒரு உயிரினக்கிளை ஆகும். இது கடற்குடுவை (வால்நாணிகள்) மற்றும் முதுகெலும்பிகள் (சில நேரங்களில் தலையோடுடையவை எனக் குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றை உள்ளடக்கியது. நுகர்ச்சியுயிரி முதுகுநாணி தொகுதியில் பெரும்பாலான உயிரிகளாக உள்ளன. தலைக்காலிகள் மட்டுமே இந்த உயிரினக்கிளையில் சேர்க்கப்படவில்லை. இந்த கிளை மிகவும் மேம்பட்ட நுகர்தல் அமைப்பால் வரையறுக்கப்படுகிறது. இதனால் முதுகெலும்பு தலைமுறைகளில் நாசியின் தோற்றத்தை ஏற்படுத்தியது.
நுகர்ச்சியுயிரி புதைப்படிவ காலம்: Cambrian Stage 3–Present, (Possible Ediacaran record, 555 Ma[2]) | |
---|---|
![]() | |
Example of Olfactores | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
Subkingdom: | யூமெட்டசூவா |
உயிரிக்கிளை: | ParaHoxozoa |
உயிரிக்கிளை: | Bilateria |
உயிரிக்கிளை: | Nephrozoa |
Superphylum: | டியூட்டெரோஸ்டோம் |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | நுகர்ச்சியுயிரி Jefferies, 1991 |
Subgroups | |
|
ஒரு அடிப்படை நரம்பு முகடு துயூனிகேட்டுகளில் உள்ளது, இது நுகர்ச்சியுயிரியின் மூதாதையரிலும் இதன் இருப்பைக் குறிக்கிறது. ஏனெனில் முதுகெலும்புகள் உண்மையான நரம்பியல் முகடுகளைக் கொண்டுள்ளன.[3] இந்த காரணத்திற்காக, இவை கிறிஸ்டோசூவா என்றும் அழைக்கப்படுகின்றன.[4]
முன்பு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, தலைக்காலிகள் என்பது மண்டையோட்டு உயிரிகளின் சகோதர குழு எனும் கருதுகோள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.[5] இதர முதுகுநாணிகளில் குறிப்பிடத்தக்க துயூனிகேட் உருவவியல் அபோமார்பிகளால் பாதிக்கப்படலாம், தலை நாணுடையவை 'மேம்பட்ட முதுகெலும்பிகள்'[6] என்ற புனைபெயரால் அழைக்கப்படுகின்றன. 2006-ல் டி. என். ஏ. வரிசை முறை தரவுத் தொகுப்பு பகுப்பாய்வுகள் நுகர்சியுயிரிகளை ஒரு கிளையாகக் கருதும் கருத்தினை வலுவாக ஆதரிக்கிறது.[7][8] நுகர்ச்சியுயிரி என்ற பெயர் இலத்தீன் சொல்லான ஆல்பாக்டரெசு ("வாசம்" என்பதிலிருந்து வந்தது), குரல்வளை சுவாசம் மற்றும் உணர்திறன் செயல்பாடுகளின் வளர்ச்சியின் காரணமாக மேம்பட்டது. தலை நாணுடையவற்றில் உ.ம். ஆம்பியாச்சசில் சுவாச அமைப்பு மற்றும் சிறப்பு உணர்வு உறுப்புகள் இல்லை.
Seamless Wikipedia browsing. On steroids.