From Wikipedia, the free encyclopedia
நீட்டலளவை அல்லது நீள அலகுகள் (units of length) என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை எஸ்ஐ, மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]
SI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது 1⁄299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[4] இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:
பெருக்கங்கள் | பெயர் | டெக்கா- | எக்டோ- | கிலோ- | மெகா- | கிகா- | டெரா- | பெட்டா- | எக்சா- | செட்டா- | யொட்டா- | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முன்னொட்டு | da | h | k | M | G | T | P | E | Z | Y | ||
காரணி | 100 | 101 | 102 | 103 | 106 | 109 | 1012 | 1015 | 1018 | 1021 | 1024 | |
பின்னங்கள் | பெயர் | டெசி- | சென்டி- | மில்லி- | மைக்ரோ- | நேனோ- | பீக்கோ- | பெம்டோ- | அட்டோ- | செப்டோ- | யொக்டோ- | |
முன்னொட்டு | d | c | m | μ | n | p | f | a | z | y | ||
காரணி | 100 | 10−1 | 10−2 | 10−3 | 10−6 | 10−9 | 10−12 | 10−15 | 10−18 | 10−21 | 10−24 |
எடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.
CGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.
SI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:
இம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு யார் ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144 மீட்டர்கள் ஆகும்.[2][5]
பொதுவான இம்பீரியல் அலகுகள்:[6]
மாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:
வானோட்டிகள் உயரத்தை அடியிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை கடல் மைலிலும் அளக்கிறார்கள்.
ஐக்கிய அமெரிக்காவில் நில அளவையாளர்கள்:
ஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.
வானியலில் பின்வரும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.