நீலன் திருச்செல்வம் (சனவரி 31, 1944 – சூலை 29, 1999) ஒரு மிதவாத, ஆற்றல் மிகுந்த, அரச சட்டமைப்பு அறிவுவாய்ந்த, சர்வதேச மதிப்பு பெற்ற ஒரு இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார். இவரே இலங்கையில் கொள்கை பற்றிய முன்னணி ஆய்வு நிறுவன அமைப்புகளின் (Centre for Ethnic Studies, Law Society Trust) அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தவர்.
நீலன் திருச்செல்வம் Neelan Tiruchelvam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் வட்டுக்கோட்டை | |
பதவியில் 1983–1983 | |
முன்னையவர் | தா. திருநாவுக்கரசு |
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1994–1999 | |
பின்னவர் | மாவை சேனாதிராஜா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 சனவரி 1944 |
இறப்பு | 29 சூலை 1999 55) கொழும்பு, இலங்கை | (அகவை
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழர் விடுதலைக் கூட்டணி |
முன்னாள் கல்லூரி | இலங்கைப் பல்கலைக்கழகம் ஆர்வார்டு சட்டப் பள்ளி |
தொழில் | வழக்கறிஞர், கல்விமான் |
படுகொலை
நீலன் திருச்செல்வம் ஜூலை 29, 1999 அன்று தற்கொலைக் குண்டுதாரி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார் [1]. தற்கொலைத் தாக்குதல் மாதிரியை முன்வைத்தும் பிற பின்புலங்களை முன்வைத்தும் இக்கொலையை தமிழீழ விடுதலைப் புலிகளே செய்திருக்க முடியும் என்று பிபிசியும் பிற ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பன்னாட்டுக் கண்டனங்கள்
நீலன் திருச்செல்வத்தின் கொலைக்கு பொது மக்களிடம் இருந்தும், மனித உரிமை அமைப்புகளில் இருந்தும், பல சர்வதேச அரசியல் தலைவர்களிடம் இருந்தும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன[2].
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.