From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாட்டில் பண்டைய காலத்தில் நிலத்தின் அளவு மதிப்பு (பரப்பை) குழி, வேலி, மா, ஏக்கர் என பேச்சு நடைமுறையிலும் ஹெக்டேர் என்ற அளவீட்டு முறையிலும் குறிக்கப்படுகிறது. வீட்டு மனைகளைப் பொருத்த மட்டில் சதுரஅடிக் கணக்கிலும், சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரங்களில் கிரவுண்டு என்ற அளவீட்டிலும் குறிப்பிடப் படுகிறது.
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி நடத்தியபோது அவர்களின் அரசை நிர்வகிக்க வரி தேவைப்பட்டது .இந்தியா ஒரு விவசாய நாடு ஒவ்வொருவரும் அவர்களின் விவசாயப் பரப்புக்கு ஏற்றவாறு வரி நிர்ணயிக்க வேண்டியது அவசியமாகியது. ஆங்கிலேயர்களின் நேரடி ஆட்சிக்குட்பட்ட நிலப்பகுதியை அளவை செய்து அனைத்தையும் மெட்ரிக் முறைக்கு மாற்றினார்கள். குறிப்பாக, தமிழ்நாட்டில் அளவைப் பணி தொடங்க ஓர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினர், அதுவே இன்றுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பிரிவுள்ள முதன்மை கட்டிடமாகும். அங்கு நில அளவைப் பணிக்கு ஆட்களை தேர்வு செய்து பயிற்சி வழங்கினர். பயிற்சி பெற்றவர்களைக் கொண்டு 1902 முதல் 1910 வரை நிலவரிகளை வசூல் (LAND TAX-COLLECTOR) செய்வதற்கு ஏற்றாற் போல நில அளவை செய்யப்பட்டு நிலத்தீர்வை (நில வரி) நிர்ணயிக்கப்பட்ட அயன் மற்றும் இனாம் நிலங்களின் வருவாய்ப் பதிவுருக்களையும்,பதிவுகளையும்,பராமரிப்பு குறித்த தமிழ்நாடு நிஅளவை எல்லை குறித்த சட்டம் 1923,பிரிவு 8ன்படி இனாம்,நில உடமையாளரிடமுள்ள கைப்பற்று அயன்,தீர்வை விதிக்கப்பட்ட அல்லது விதிக்கப்படாத தரிசு,வனம்,மற்றும் புறம்போக்கு(பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டது)ஆகிய முக்கியத் தலைப்புகளில் கிராம நிலையான பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.ஒருபோகம் அல்லது இருபோகம் என நஞ்சை நிலங்களும்,புஞ்சை அல்லது மானாவாரி(சில மாவட்டங்களில்)இவைகளுக்கு தனித்தனியே தீர்வை(நிலவரி) விதிக்கப்பட்ட, நன்செய்,புன்செய் நிலங்களுக்கு ஏற்றவாறு புலங்கள்,(SURVEY FIELD) உட்பிரிவுகள் (SUB-DIVISION) என அமைத்து, அளவைப்பணி (MEASUREMENTS WORK) முடித்து நிலப்படங்கள் (FIELD MEASUREMENT BOOK)F.M.B [1] தயாரித்தனர். தொடர்ந்து வட்ட வரைபடம்(TALUK MAP) [2],மாவட்ட வரைபடம்(DISTRICT MAP) [3] தயாரித்து, இன்றைய நிலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் வரைபடங்களில் மாற்றம் செய்ய தமிழ்நாடு நில அளவைத்துறை ஒன்றை [4] ஏற்படுத்தி இன்றளவில் ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறது.
டிராவர்ஸ் சர்வே என்பது மிகப் பெரிய பரப்பளவு உள்ள,கிராமம்,வட்டம்,மாவட்டம் போன்றவற்றின் பரப்பைக் கணக்கிடும் போது பரப்புப் பிழைகள் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் வராமல் பரப்புப் பிழை ஏற்படும் நேர்வுகளில்,பரப்புப்பிழை எங்கே ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய, சிறுச் சுற்றுப் (Minor Circuit) பகுதிகளாக அதாவது கண்டங்களாக பிரித்து கோண அளவைக் கருவி (Theodolite) கொண்டு, அளவை செய்து (Gale's Traverse Table) நீண்ட சதுர கணித முறைப்படி துள்ளியமாக பரப்பு கணித்து அனுமதிக்கப்பட்ட பரப்புப் பிழைகளுக்கு உட்பட்டு பரப்பு நிர்ணயம் செய்யப்படும். தமிழகத்தில் சங்கிலி (chain) மற்றும் நேர் கோணக்கட்டை(cross staff)கொண்டு அளவைப் பணி முடித்திருப்பதால்,ஒவ்வொரு நில அளவைப் புலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட பரப்புகளின் கூட்டு மதிப்பும்,சிறுச் சுற்றுப் (Minor Circuit) பகுதிகளாக பிரித்து நிர்ணயிக்கப்பட்ட பரப்புகளின் கூட்டு மதிப்பும், அனுமதிக்கப்பட்ட பரப்புப் பிழைக்கு உட்பட்டுள்ளதா? என பரிசோதித்து ஏற்படும் அதிகப்படியான பரப்புப் பிழை எந்தப் பகுதி அதாவது கண்டத்தில் என இலகுவாக கண்டுபிடிக்க [9] ஏதுவாக முறையில் அளவை செய்யப்படும் முறையே டிராவர்ஸ் சர்வே எனப்படும்.(ஆங்கிலம் Traverse Survey or Theodolite Method)
நில உடமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, ஒவ்வொரு எல்லை வளைவுகளையும் ஒவ்வொரு முக்கோணமாக அமைத்து நில அளவைப் புலங்களாக(Survey Fields) அளவை செய்யப்படும் முறை எளிய முக்கோண அளவை முறை ஆகும்.(Simple Triangletion Method),[10] இதில் ஒவ்வொரு வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டதால் பொருட்செலவு அதிகமாகவும்,வரைபடங்கள் தயாரிக்க நீண்டகாலமும் ஏற்பட்டது,துள்ளியமாக கணக்கீடும் செய்ய இயலவில்லை.
நில உடமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, ஒவ்வொரு எல்லை வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டு உட்பிரிவுகளாக(Subdivisions) அமைத்து நில அளவைப் புலத்தின் ஏதாவது இரு முணைகளில் கற்கள் நடப்பட்டு இரு கற்களுக்கு இடைப்பட்ட கற்பனைக் கோட்டில் ஒவ்வொரு வளைவுகளுக்கும்(cross staff) மூலம் செங்குத்தளவு அளவை செய்யப்படும் முறை புங்கனூர்(Punganoor Method or Ray System) அளவை முறை ஆகும்.[11] இதில் ஒவ்வொரு வளைவுகளுக்கும் கற்கள் நடப்பட்டதால் பொருட்செலவு அதிகமாகவும்,வரைபடங்கள் தயாரிக்க நீண்டகாலமும் ஏற்பட்டது,துள்ளியமாக கணக்கீடும் செய்ய இயலவில்லை.
நில உடமையாளர்களின் அனுபவ எல்லைகளை அனுசரித்து, ஒவ்வொரு உட்பிரிவுகளாக(Subdivisions) அமைத்தும்,நஞ்சையில் ஐந்திலிருந்து பத்து ஏக்கருக்கு மிகாமலும்,புஞ்சையில் பத்து ஏக்கரிலிருந்து இருபது ஏக்கர் வரையிலும் அமைத்து, ஒவ்வொரு நில அளவைப் புலங்களுக்கும் புல முச்சந்திகளுக்கு மட்டும் கற்கள் நடப்பட்டு நிலங்களின் வளைவுகளுக்கும் செங்குத்தளவு அளவை செய்து அளவை செய்யப்படும் முறைதான் மூலை விட்டம் மற்றும் செங்குத்தளவு முறையாகும். (ஆங்கிலம்Diagonal&Offset System)[12]
நில உடைமையாளருடைய அனுபவ எல்லைகளின் (வரப்புகள்) படி அளவை முடிந்த பகுதிகள் முறையாக நில பதிவுருக்கள் (வரை படம்) தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வருவாய் கிராம நிருவாக அலுவலர்கள் (அன்று கர்ணம்) வசம் ஒரு நகல், வட்ட (தாசில்தார்) நிர்வாகத்திடம் ஒரு நகல், மாவட்ட நிர்வாகத்திடம் (மாவட்ட வருவாய் அலுவலர்) ஒரு நகல், மைய நில அளவை அலுவலகத்தில் ஒரு நகலும், அளவை செய்த மூல ஆவணம் (ORIGINAL) மாநில நில அளவை ஆவணக் காப்பகத்திலும் பாதுகாக்கப்படுகிறது.
ஒவ்வொரு நில உடமையாளரின் நில எல்லைகள், எல்லைகளில் உள்ள வளைவுகளுக்கு நடப்பட்டுள்ள குறிகளை(சர்வே கற்கள்) பாதுகாத்தல்,சீர்படுத்தல்,புதுப்பித்தல் ஆகியவைகளை நில உடமையாளருக்கு உள்ள கடமையாக தமிழ்நாடு நில அளவை எல்லை குறித்த சட்டம் 1923 பிரிவு 8லும்,சட்டமுறையான ஒழுங்குபடுத்தும் விதிகளும்[13] நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நில உடமையாளரின் நில எல்லைகளுக்குள் உள்ள விளக்கிகள் (கிணறு, குடிசை, சிறு கட்டடங்கள், வீடு, வண்டிப்பாதை போன்ற சின்னங்கள்) ஆகியவைகளை கிராம நிர்வாக அலுவலர் மூலமாக சமநபந்தப் பட்ட நில அளவரால் அளவீடு செய்து உரிய புலப்படத்தில் (Field Measurement Book) பதிவு செய்து, உரிய ஆவணங்களில் பதிவு செய்து வைக்க வேண்டும் [13].
புலப் படம் நில உடைமையாளருடைய அனுபவ எல்லைகளின் (வரப்புகள்) படி அளவை முடிந்த பகுதிகள் முறையாக நில பதிவுருக்கள் (வரை படம்) தயாரிக்கப்பட்டு வருவாய்த் துறையினரால் பராமரிக்கப்படும், நில (FIELD MEASUREMENT BOOK) வரைபடமாகும். இவ்வரைபடம் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள நன்செய், புன்செய், தரிசு, சமீன் நிலங்கள், குடியிருப்புப் பகுதிகள் (நத்தம் சர்வே) என நில வகைப்பாட்டிற்குத் தகுந்தவாறும், கிராமத்தின் மொத்தப் பரப்பிற்கு ஏற்றவாறும் புல எண்கள் ஏற்படுத்தப் பட்டு அளவைப் பணி முடித்து தயரிக்கப்படும் மாவட்ட வருவாய்த் துறை ஆவணமாகும்.
புலப் படத்தின் (படம்) மேல் பகுதியில் கருர்மாவட்டத்தின் பெயர்,சக்திவேல் கடவூர்வட்டத்தின் பெயர், வருவாய் வட்டத்தில் எந்த வரிசை எண், வருவாய் கிராமத்தின் பெயர், அந்த புல எண்ணின் மொத்தப் பரப்பு, படத்தின் கீழ் படம் எந்த அளவுத் திட்டத்தில் வரைவு செய்யப் பட்டுள்ளது, என்ற விபரம் குறிக்கப் பட்டிருக்கும். புல எண்ணின் பக்கப் புல எண்கள் எழுதப்பட்டு அடிக்கோடு இடப்பட்டிருக்கும். புலப்படத்தில் எத்தனை நில உடைமையாளர்கள் உள்ளார்களோ? அதற்கேற்றவாறு உட்பிரிவு எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.