From Wikipedia, the free encyclopedia
நிரஞ்சனி சண்முகராஜா (Niranjani Shanmugaraja) இலங்கைத் தமிழ் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் இலங்கை சிங்கள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்து விருதுகள் பெற்றவர்.[2][3] இவர் ரூபவாகினி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.
நிரஞ்சனி சண்முகராஜா | |
---|---|
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | திரைப்பட நடிகை, தொகைக்காட்சித் தொகுப்பாளர் |
அறியப்படுவது | இனி அவன் கோமாளி கிங்ஸ் கிரிவசிபுர சுனாமி |
விருதுகள் | சிறந்த நடிகை - கிரு கோல்டன் திரைப்பட விருது, சிறந்த நடிகை - தெரன லக்சு திரைப்பட விருது 2013 சிறந்த நடிகை - இலங்கை சர்வதேச திரைப்பட விழா, கலிபோர்னியா 2022[1] |
நிரஞ்சனி முதன் முதலில் 2012 ஆம் ஆண்டில் இனி அவன் என்ற விருது பெற்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படத்தில் துணைப்பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் தர்சன் தர்மராஜ், சுபாசிணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[4] 2014 இல் நடைபெற்ற கிரு கோல்டன் திரைப்பட விருது விழாவில், இனி அவன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.[5][6] 2013 ஆம் ஆண்டுக்கான தெரன இலக்சு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் ஒரு முக்கியத் திரைப்படமாக கருதப்படும் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தில் முதன்முறையாக முன்னணிக் கதாநாயகியாக இவர் நடித்தார்.[7]
2021 இல், இவர் ரஃபயெல்லா பெர்னாண்டோ புகழ் விளம்பர நாட்காட்டியில் இடம்பெற்றார்.[8] அதே ஆண்டில், பயெல்சா சர்வதேச திரைப்பட விழாவில் சுனாமி என்ற 2020 இல் வெளிவந்த சிங்களத் திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.[9] 2022 சூன் மாதத்தில் கலிபோர்னியாவில் இடம்பெற்ற இலங்கை பன்னாட்டு திரைப்பட விழாவில் இவருக்கு சுனாமி திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.[1]
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2012 | இனி அவன் | தமிழ் |
| |
2016 | சிவப்பு வண்ணத்துப்பூச்சி கனவு | ராஜினி | சிங்களம் | |
2017 | மகன்களும் தந்தைகளும் | சிங்களம் | ||
2018 | கோமாளி கிங்ஸ் | யோகா | தமிழ் | கதாநாயகி |
2020 | சுனாமி | கல்யாணி | சிங்களம் |
|
2021 | கிரிவசிபுர | பேரரசி ரங்கநாயகி | சிங்களம் | கதாநாயகி |
சொப்பன சுந்தரி | தமிழ் | தயாரிப்பில் | ||
2022 | வித்துக்கள் | தமிழ்/சிங்களம்/ஆங்கிலம் | கதாநாயகி[10] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.