டத்தோ பென்தாரா செத்தியா நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் (Nik Abdul Aziz bin Nik Mat, 10 ஜனவரி 1931 - 12 பிப்ரவரி 2015) ஒரு முன்னாள் மலேசிய அரசியல்வாதி, முஸ்லீம் ஆன்மிக அறிஞர், மலேசிய கிளாந்தான் மாநில முதல்வர் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) ஆன்மீகத் தலைவர் ஆவார். "டோக் குரு" நிக் அசிஸ் அவரது பிரபலமான புனைபெயர் ஆகும்.
மாண்புமிகு துவான் குரு டத்தோ பெந்தாரா செத்தியா நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் Nik Abdul Aziz Nik Mat | |
---|---|
கிளாந்தான் மந்திரி பெசார் | |
பதவியில் 1991–2013 | |
ஆன்மீகத் தலைவர் மலேசிய இசுலாமிய கட்சி | |
பதவியில் 1991 – 12 பிப்ரவரி 2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புலாவ் மலாக்கா, கோத்தா பாரு, கிளாந்தான், மலேசியா | 10 சனவரி 1931
இறப்பு | 12 பெப்ரவரி 2015 84) புலாவ் மலாக்கா, கோத்தா பாரு, கிளாந்தான், மலேசியா | (அகவை
அரசியல் கட்சி | மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) |
இவர் தமிழ், அரபு, உருது மொழியில் சரளமாக உரையாடுவதில் வல்லவர். இவர் மலேசியத் தமிழர்களிடம் மிகப் பிரபலமான அரசியல்வாதி ஆவார்.
தொடக்க வாழ்க்கை
நிக் அப்துல் அசிஸ் கிளந்தான் மாநில புலாவ் மலாக்காவில் 1931-இல் பிறந்தார். அவர் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில், தம் பட்டப் படிப்பைப் பெற்றார். அதன் பின் எகிப்தில் தனது மேல் படிப்பை மேற்கொன்டார். எகிப்தில் இருந்து மலேசியா வந்த இவர் மத ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[1]
அரசியல் வாழ்க்கை
நிக் அசிஸ் மலேசிய இசுலாமிய கட்சியில் 1967 ல் இணைந்தார். அதே ஆண்டில் அவர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்,
பின் 1986 ஆம் ஆண்டு கிளந்தான் மாநில மாநில பாஸ் ஆணையர்.மத்திய அரசியலில் இருந்து சில காலம் ஒதுங்கி இருந்த இவர் பிறகு,1986 மலேசியப் பொதுத் தேர்தலில் கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார் . 1990 மலேசிய பொதுத் தேர்தலில் கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் மீன்டும் வெற்றி பெற்று, கிளந்தான் மாநில முதல்வர் ஆனார். பின் அடுத்தடுத்து நடை பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஐந்து முறை தொடர்ந்து முதல்வர் ஆனார்.
அரசியலில் இருந்து ஓய்வு
2013 மலேசியப் பொதுத் தேர்தலில் கிளந்தான் மாநில சட்டமன்றத்தில் மீண்டும் வெற்றி பெற்றாலும் உடல் நலக் குறைவால் கிளந்தான் மாநில முதல்வர் ஆக இவர் மறுத்து விட்டார்.
இறப்பு
நிக் அசிஸ் 2012 பிப்ரவரி 12 இரவு 9:40 மணிக்கு புலாவ் மலாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.[2]
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.