உடற்பயிற்சி வீரர் From Wikipedia, the free encyclopedia
நிக்கொலாய் எஃபிமோவிச் அந்திரியானொவ் (Nikolai Yefimovich Andrianov, உருசியம்: Николай Ефимович Андрианов; 14 அக்டோபர் 1952 - 21 மார்ச் 2011)[2] ஒரு சோவியத் / ரஷ்ய ஜிம்னாஸ்ட் ஆவார். மிக அதிக ஒலிம்பிக் பதக்கங்களுக்கான - 15 (7 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கம், 3 வெண்கல பதக்கங்கள்) சாதனையை செய்தவர். பின்னாளில் மைக்கேல் ஃபெல்ப்ஸ் 2008 பெய்ஜிங் கோடைக்கால ஒலிம்பிக்கில் அவரை விட அதிக பதக்கங்கள் வென்று சாதனையை முறியடித்தார். மொத்த ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில் (ஆண் அல்லது பெண் பிரிவில்), ஆண்ட்ரியோவ் மூன்றாவது வீரராக உள்ளார். பெல்ப்ஸின் 28 மற்றும் லாரிசா லமினினா 18 பதக்கங்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில உள்ளனர். 1976 கோடைக்கால ஒலிம்பிக்ஸில் ஆண்ட்ரியானோவ் மிகவும் அதிக பதக்கங்களை வென்றார். 6 தனிநபர் பதக்கம் மற்றும் ஒரு அணிப் பதக்கம் வென்றார்.
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
Andrianov c. 1974 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனித் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | நிக்கொலாய் எஃபிமோவிச் அந்திரியானொவ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | சோவியத் ஒன்றியம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 166 cm[1] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
எடை | 60 kg | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வகை | ஆண்கள் கலையாற்றல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைமைப் பயிற்சியாளர்(கள்) | நிகோலாய் டோல்கேச்சேவ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஆண்கள் கலைநய சீருடற்பயிற்சிகள் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டிலும், மிகப் அதிக தனிப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களுக்கான (12) சாதனையைப் பெற்றுள்ளார். தனி நபர் ஆண் ஜிம்னாஸ்டிக்சில் 6 தஙகப் பதக்கங்கள் பெற்று சாதனையைப் , போரிஸ் ஷாக்லின் மற்றும் டிமிட்ரி பிலொஜெர்ஷேவுடன் பகிர்ந்துள்ளார்.
ஒலிம்பிக், உலக மற்றும் ஐரோப்பிய மட்டங்களில் உள்ள அனைத்து வெற்றியாளர்களிடையே உள்ள பல தரவரிசையில், அவர் மிக உயர்ந்தவராக உள்ளார். உதாரணமாக, தங்க மொத்த மட்டத்தில் அல்லது தங்கம் மட்டத்தில் உள்ள மொத்த தனிநபர் பதக்கங்களில் வைட்டலி ஸ்கெர்போவிற்கு இரண்டாவதாக உள்ளார். இந்த சாதனைகள் அவரை அனைத்து காலத்திலும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஜிம்னாஸ்ட்களில் ஒருவராக கருதவைக்கிறது. .
ஆண்ட்ரியோவ் 11 வயதில் விளாடிமிர் நகரில் உள்ள ப்யூவெஸ்ட்வேக் விளையாட்டு சமுதாயத்தின் குழந்தைகள் மற்றும் இளைஞர் விளையாட்டுப் பள்ளியில் நுழைந்தார். அவருடைய முதல் சர்வதேச வெற்றி 1971 ஆம் ஆண்டில் மாட்ரிட்டில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கிடைத்தது, அங்கு அவர் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். 1971 மற்றும் 1980 க்கு இடையில் அவர் ஒலிம்பிக் விளையாட்டுகள், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புகள் உட்பட பல சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை வென்றார்.
1972 மாடி போட்டியில் (1972 Floor competition) ஆண்ட்ரியோ முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் 1976 ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டில் சிறந்து விளையாடி நான்கு தங்கங்களையும் வென்றார். மேலும் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல, அனைத்து சுற்றிலும் தேர்ந்தவர் (all rounder) ஆகிய பதக்கங்களை வென்றார் . இந்த பதக்கங்கள் 1976 ஆம் ஆண்டின் தரைப் பயிற்சி (floor exercise), ரிங்ஸ் (rings), வால்ட்ஸ் (vaults) மற்றும் அனைத்து சுற்றுக்கும் (all round) பெற்றவை. 1992 ஆம் ஆண்டில் வைட்டலி ஸ்கெர்போ ஆறு தங்கம் வெல்லும் வரை, ஒற்றை ஆட்டங்களில் நான்கு ஜிம்னாஸ்டிக் தங்கங்கள் எனும் சாதனை ஆண்ட்ரியோவுடையது.
மாஸ்கோவில் 1980 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆட்ரியானோவ் ஒலிம்பிக் உறுதிமொழியை விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் , அவர் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலத்தையும் வென்றார். அந்த ஒலிம்பிக்கில் ஆண்ட்ரியோவோவின் தங்கம் வால்ட்டிலும் (vault), அணித் தேர்விலும் இருந்தது. அவரது வெள்ளிகள் அனைத்து சுற்று மற்றும் தரை பயிற்சிகளில் இருந்தன. அவருடைய வெண்கல பதக்கம் கிடைமட்ட பட்டியில் (horizontal bar) இருந்தது . அந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றார்.
அவரது இறுதி ஆண்டுகளில், ஆண்டிரியோவ் நரம்பியல் சீர்கேடு பல அமைப்பு வீழ்ச்சியால் தாக்கப்பட்டார். மேலும் அவரது இறுதி மாதங்களில் அவரது கை, கால்களை நகர்த்த முடியவில்லை, பேசவும் முடியவில்லை[3]. அவருடைய சொந்த ஊரான விளாடிமிர்ல் 21 மார்ச் 2011 நாளில், 58 வயதில் இறந்தார்[4]. ரஷ்யாவின் தேசிய உடற்பயிற்சிக் கழக பயிற்சியாளர் அலெக்ஸாண்டர், அலெக்ஸாண்ட்ரோவ் மரணம் "சோகம்" என்று அழைத்தார், ஆனால் நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறினார்[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.