சிந்நு சமவெளி நாகரிக வெண்கலச்சிலை From Wikipedia, the free encyclopedia
நடனமங்கை சிற்பம் (Dancing Girl) சிந்துவெளி நாகரிகத்தின் பண்டைய மொகெஞ்சதாரோ நகரத்தின் தொல்லியல் மேட்டின் (தற்கால பாகிஸ்தான்) அகழாய்வில் கண்டெத்த வெண்கலத்தாலான சிற்பம் ஆகும். இச்சிற்பத்தின் காலம் கிமு 2300-க்கும், கிமு 1750-க்கும் இடைப்பட்ட காலம் என கணிக்கப்பட்டுள்ளது. [1] 10.5 சென்டிமீட்டர்கள் (4.1 அங்) உயரம் கொண்ட தொல்பொருள் பண்பாட்டு காலத்திய நடன மங்கையின் சிற்பம் ஆடையின்றி வடிக்கப்பட்டுள்ளது.
மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட சிந்துவெளி நாகரிக கால வெண்கலத்தால் ஆன நடன மங்கையின் சிற்பம் | |
---|---|
![]() | |
ஓவியர் | சிந்துவெளி நாகரிகம் |
ஆண்டு | ஏறத்தாழ கிமு 2300 - கிமு 1750 இடைப்பட்ட காலம் |
வகை | வெண்கலம் |
பரிமானங்கள் | 10.5 × 5 செமீ (4 1/8 × 2 அங்குலம் ) |
இடம் | தேசிய அருங்காட்சியகம், புது டில்லி |
இச்சிற்பத்தை பிரித்தானிய தொல்லியல் அறிஞரான எர்னஸ்டு ஜெ. எச். மாக்கே 1926-இல் கண்டுபிடித்தார்.இந்த நடனமங்கை சிற்பம் தற்போது புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மொகெஞ்சதாரோவின் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்த இரண்டு வெண்கல பெண் சிற்பங்களில் இதுவும் ஒன்று. வலது கையை இடையில் ஊன்றிக் கொண்டு, இடது கையை தொடையில் வைத்துக் கொண்டு ஆடையின்றி நிற்கும் நிலையில் வடிக்கப்பட்ட இந்நடன மங்கையின் சிற்பத்தில் கைகளில் வளையல்களும், கழுத்தில் கழுத்தணியும் (நெக்லஸ்) உள்ளது.[2] நடன மங்கையின் இடது கையில் 24 வளையல்களும், வலது கையில் 4 வளையல்களும் உள்ளன; சிற்பத்தின் இரண்டு கைகளும் வழக்கத்தை விட நீளமாக உள்ளன.[3]சிற்பத்தின் கழுத்தில் அணிந்துள்ள அட்டிகையில் மூன்று சிறிய பதக்கங்கள் உள்ளன. நடன மங்கையின் நீண்ட முடி கொத்தாக இடது தோளில் அழகாக வைக்கப்பட்டுள்ளது.[4]
Seamless Wikipedia browsing. On steroids.