From Wikipedia, the free encyclopedia
தோம்சுக் மாகாணம் (Tomsk Oblast, உருசியம்: Томская область, தோம்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மேற்கு சைபீரிய சமவெளியின் தெற்கில் உள்ளது. இது சைபீரிய நடுவண் மாவட்டத்தின் தென்மேற்கில் உள்ள பகுதியாகும். இதன் நிர்வாக மையம் தோம்சுக் ஆகும். மக்கள் தொகை: 1,047,394 (2010 கணக்கெடுப்பு)[5]
தோம்சுக் மாகாணம் Tomsk Oblast | |
---|---|
Томская область | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | சைபீரியா[1] |
பொருளாதாரப் பகுதி | மேற்கு சைபீரியா[2] |
நிர்வாக மையம் | தோம்சுக் |
அரசு | |
• நிர்வாகம் | தோம்சுக் சட்டமன்றம் |
• ஆளுநர் | செர்கே சுவாச்கின்[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,16,900 km2 (1,22,400 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 16வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[5] | |
• மொத்தம் | 10,47,394 |
• மதிப்பீடு (2018)[6] | 10,78,280 (+2.9%) |
• தரவரிசை | 50th |
• அடர்த்தி | 3.3/km2 (8.6/sq mi) |
• நகர்ப்புறம் | 70.2% |
• நாட்டுப்புறம் | 29.8% |
நேர வலயம் | ஒசநே+7 ([7]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-TOM |
அனுமதி இலக்கத்தகடு | 70 |
OKTMO ஐடி | 69000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[8] |
இணையதளம் | http://www.tomsk.gov.ru/ |
இம்மாகாணத்தின் வளர்ச்சி 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தொடங்கியது. இப்பகுதி 1604இல் நிறுவப்பட்டது. தோம்ஸ்க் மாகாணம் 316.900 சதுர கிலோமீட்டர் (122,400 சதுர கிலோ மீட்டர்) கொண்டது என்றாலும், பெரும்பாலான பகுதிகள் நெருங்க இயலாதவாறு அடைபட்டதாக இருந்தது. ஏனெனில் இப்பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் தைகா காடுகள், சதுப்பு நிலம் போன்றவை சூழ்ந்து இருந்தன. இந்த ஒப்ளாஸ்ட் கிராஸ்னயார்சுக் பிரதேசம், தியூமென் ஒப்லாஸ்து, ஓம்ஸ்க், நோவசைபிர்ஸ்க் ஓப்லாஸ்து, கெமரோவோ ஓப்லாஸ்து போன்றவை எல்லைகளாக உள்ளன.
நீண்ட காலத்துக்கு முன்பே சைபீரியா ரஷ்யாவின் ஒரு பகுதியாக ஆகிவிட்டது. நவீன டாம்ஸ்க் ஒப்லாஸ்து பிரதேசத்தில் சேர்ந்த மக்கள் தைகா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கருதப்படுகிறது. இந்த பிரதேசத்தின் வளர்ச்சி என்பது 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளின் இறுதியில் தொடங்கியது. இப்பகுதியின் மிகப் பழமையான கிராமமான நர்யம் 1596 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாகாணத்தின் நிர்வாக மையம், டாம்ஸ்க் நகரில் 1604 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
டாம்ஸ்க் ஒப்லாஸ்து கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு , இரும்பு, நிலக்கரி , வனவளம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. மேற்கு சைபீரியன் காட்டு வளங்களில் சுமார் 20% டாம்ஸ்க் ஒப்லாஸ்தில் அமைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதியை தொழில் துறையும், வேளாண்மை 19%, கட்டுமானத்துறை 13% பங்களிக்கிறது. வேதிப்பொருள் மற்றும் எண்ணெய் தொழில்கள் இந்த பகுதியில் நன்கு வளர்ந்துள்ளது. இந்த ஒப்ளாஸ்ட்டின் முதன்மை ஏற்றுமதி பொருட்கள் : எண்ணெய் (62.1%), மெத்தனால் (30.2%), மற்றும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் (4.8%).
இந்த பகுதியின் மக்கள் தொகை: 1,047,394 ஆகும். ( 2010 கணக்கெடுப்பின்படி ); 1,046,039 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ); 1,001,613 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி .) [10] ஒப்ளாஸ்ட் பகுதியில் வாழும் முக்கியாமான இனக்குழுக்கள் [5] ரஷ்யர்கள் (92.1%), உக்ரேனியர -பெலோருசியர் (1.4%), சைபீரிய தடார்கள் (1.7%) வோல்கா ஜெர்மன் . (0.9%) இவர்களல்லாது ஸ்லேவ்கள் , பின்லாந்துக்காரர்கள், ஜேர்மனியர்கள் போன்ற இனக்குழுவினரும் உள்ளனர். 1990 களில் ஏற்பட்ட ஆபத்தான நிலைமைக்கு பிறகு, டாம்ஸ்க் ஒப்லாஸ்து தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. 2009 இன் முதல் மூன்று மாதங்களில், 3,337 பிறப்புகள் (2008 விட 2.4% அதிகமாக) மற்றும் 3,339 இறப்புகள் (2008 விட 6.7% குறைவாக) இருந்தன.[9]
2008 க்கான பிறப்பு விகிதம் 2007 விட 7.97% அதிகம்.
2012 இன் முக்கிய புள்ளிவிவரங்கள்
மொத்த கருத்தரிப்பு விகிதம்:[13]
2009 - 1.54 | 2010 - 1.49 | 2011 - 1.48 | 2012 - 1.55 | 2013 - 1.59 | 2014 - 1.59 (இ)
2012 இன் அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பின்படி[14] டாம்ஸ்க் ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 33.3% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர், 4% பொதுவான கிருத்துவர் , 2%கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்துவர்கள், 1% பின்பற்றுகிறது ஸ்லாவிக் நாட்டுப்பற சமயம், 1% இஸ்லாமியர், 0.62% திபெத்திய புத்த மதம் , மற்றும் 0.4% கத்தோலிக்க திருச்சபை . கூடுதலாக, மக்கள் தொகையில் 29% "ஆன்மீக நாட்டம் இல்லாதவர்களாக தங்களை கருதுபவர்கள், 15% நாத்திகர் , மற்றும் 13,68% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரு கேள்விக்கு பதில் தராதவர்கள்.[14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.