தோத்
From Wikipedia, the free encyclopedia
தோத் (Thoth) பண்டைய எகிப்தியக் கடவுள்களில் ஒருவர். தோத் கடவுள் நீண்ட அலகு கொண்ட பறவைத் தலையும், மனித உடலும் கொண்டது. நீண்ட இறகும், பறவைத் தலையும் கொண்டவர். மூத்து பெண் தேவதை இவரது மனைவி ஆவார்.[1] தோத் கடவுள் ஞானம், எழுத்து, சித்திர எழுத்து, அறிவியல், மாயாஜால வித்தை, கலைகள், நியாயத் தீர்ப்பு மற்றும் இறப்பிற்கு அதிபதி ஆவார். பண்டைய கிரேக்கக் கடவுள்களில் எர்மெசு தோத் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுகிறார். தோத் கடவுளின் முக்கியக் கோயில், எகிப்தில் ஹெர்மபோலிஸ் நகரத்தில் உள்ளது. 1826-இல் இக்கோயிலின் சிலபகுதிகள் அழிக்கப்பட்டது.[2]
சூரியக் கடவுளான இரா, சூரியப் படகில் ஏறி பாதாளத்தில் சுற்றி வருகையில் அதன் இருபுறங்களிலும் தோத் கடவுளும், அவரது மனைவியும், தேவதையுமான மாத் உடன் வருகின்றனர்.[3]எகிப்தின் பிந்தைய காலத்தில் தோத்திற்கு கடவுளுக்கு இணையான மதிப்பு தரப்படவில்லை[4][5]




இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.