From Wikipedia, the free encyclopedia
தோடா மொழி அல்லது தொதவம் தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். தென்னிந்தியாவிலுள்ள நீலகிரி மலைப் பகுதியில் வாழும் தோடர்களால் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 1600 மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இதிலுள்ள உரசொலிகள், உருட்டொலிகளுக்காகப் பெயர் பெற்றது.
தாம் உதகமண்டலத்தில் வாழ்ந்த காலத்தில் ஜி. யு. போப் தோடர் மொழிக்கு ஓர் இலக்கண நூல் எழுதினார். ’அன் அவுட்ஸ்டேன்டிங் கிராமர் ஃபார் தோடா லேங்குவேஜ்’ (An outstanding grammar for Toda Language) எனும் பெயரில் அந்நூலை வெளியிட்டார்.[1] இந்த பழங்குடி மொழியானது மிக விரைவாக அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள் ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.[2]
Seamless Wikipedia browsing. On steroids.