From Wikipedia, the free encyclopedia
தொமினிக்கன் சபை (ஆங்கில மொழி: Dominican Order) அல்லது மறையுரையாளர் சபை (பழைய தமிழ் வழக்கில் சாமிநாதர் சபை / போதகர் சபை) என்பது ஒரு கத்தோலிக்க துறவற சபையாகும். இது எசுப்பானிய குருவான புனித தோமினிக்கால் பிரான்சு நாட்டில் துவங்கப்பட்டு 22 டிசம்பர் 1216இல் திருத்தந்தை மூன்றாம் ஹோனோரியுஸின் (1216–27) அனுமதிப்பெற்றது. இதில் துறவியர் (குருக்கள், அருட்சகோதரர்கள்), அடைபட்ட வாழ்வு வாழும் கன்னியர் (Nuns), பணிவாழ்வு வாழும் கன்னியர் (active sisters) மற்றும் பொது நிலை மூன்றாம் சபையினர் ஆகியேர் உறுப்பினராக உள்ளனர். இச்சபையின் நோக்கம் நற்செய்தி அறிவிப்பதும், திரிபுக் கொள்கைகளை எதிர்க்க கத்தோலிக்க மறையினை பயிற்றுவிப்பதும் ஆகும். இப்பயிற்றுவிக்கும் பணியினால் நடுக் காலத்தில் இச்சபையினரே கற்றோரிடையே முன்னணியில் இருந்தனர்.[2] இச்சபை பல கத்தோலிக்க இறையியலாளர்கள் மற்றும் மெய்யியலாளர்களை உருவாக்கியதால் மிகவும் புகழ் பெற்றது.
Ordo Praedicatorum | |
![]() | |
சுருக்கம் | OP |
---|---|
உருவாக்கம் | 1200s |
நிறுவனர் | புனித தோமினிக் |
வகை | அர்ப்பணவாழ்வுச் சபை |
தலைமையகம் | சான்த சபீனா, உரோமை நகரம், இத்தாலி |
உறுப்பினர்கள் (2013) | 6,058 (4,470 குருக்கள் உட்பட)[1] |
தலைவர் | அரு. பிரூனோ கதோரே |
சார்புகள் | கத்தோலிக்க திருச்சபை |
வலைத்தளம் | op |
இதன் தலைவர் Master of the Order என அழைக்கப்படுகின்றார். அரு. பிரூனோ கதோரே இதன் தற்போதய தலைவர் ஆவார். 2013ம் ஆண்டின் கணக்குப்படி இச்சபையில் 6058 துறவியர் இருந்தனர். அவர்களுல் 4470 நபர்கள் குருக்களாவர்.[1]
கத்தோலிக்க செபமாலையின் பக்தியினைப்பரப்பியதில் இச்சபையினருக்கு குறிக்கத்தக்க பங்கு உள்ளது. இச்சபையினச்சேர்ந்த நால்வர் உரோமை ஆயரான திருத்தந்தையாக இருந்துள்ளனர்:
இச்சபையின் குறிக்கோளுரை புகழ, ஆசீரளிக்க, மறையுரையாற்ற (இலத்தீனில்: Laudare, Benedicere, Praedicare) என்பதாகும்.
Seamless Wikipedia browsing. On steroids.