தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை

From Wikipedia, the free encyclopedia

தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை
Remove ads
Remove ads

தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை (Zapatista Army of National Liberation (Ejército Zapatista de Liberación Nacional, EZLN) என்பது மெக்சிகோவின் பின்தங்கிய பிரதேசங்களுள் ஒன்றான சியாபஸ் பகுதியில் இயங்கும் ஆயுதம் தாங்கிய புரட்சி இயக்கமாகும்.

Thumb
தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படையின் (EZLN) கொடி.

மெக்சிகோவின் பழங்குடி இன மக்களையே தமது சமூக தளமாக கொண்டியங்கும் இவ்வியக்கம் நகரப்பகுதிகளிலும் உலகளாவிய ரீதியிலும் தமக்கான ஆதரவு தளத்தையும் வலையமைப்பையும் கொண்டிருக்கிறது.

இவ்வியக்கத்தின் தலைவராக தளபதி எஸ்தர் (Comandanta Esther) கருதப்படுகிறார். ஆயினும் இவ்வியக்கத்தின் புகழ்பெற்ற பிரதிநிதியாக அதன் பேசாளரும் துணைத்தளபதியுமான சப்கொமன்டான்ரி மார்க்கோஸ் (Subcomandante Marcos) விளங்குகிறார்.

மெக்சிகோ புரட்சியாளர் சபடா (Zapata) வின் பெயரையே இவ்வியக்கம் தாங்கியுள்ளது. தம்மை சபடாவின் இலட்சிய வழிவருநர்களாக அடையாளங்காணும் இவ்வியக்கத்தினர், பேரரசுவாதத்திற்கு எதிரான பழங்குடி மக்களின் எதிர்ப்பியக்கத்தின் வழிவருநர்களாகவும் அடையாளங்காண்கின்றனர்.

Thumb
மெக்சிகோ புரட்சியாளர் சபடிஸ்டா

ஆயுதம் தாங்கிய ஆனால் இன்னமும் வன்முறைகள் எதிலும் ( 1990களின் ஆரம்பத்தில் ஏற்பட்ட ஓர் எழுச்சி நிகழ்வை தவிர்த்து) ஈடுபடாத, வெளிநாட்டு, உள்நாட்டு ஆதரவுத்தளத்தை அமைக்கவும் பேணவும் செய்மதி தொலைபேசி, இணையம் உள்ளிட்ட நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்துகின்ற சபடிஸ்டாவினை உலகின் முதல் பின்னை நவீன புரட்சிகர இயக்கமாக சிலர் இனங்காண்கின்றனர்.

Thumb
சபடிஸ்டா படையின் கட்டுப்பாட்டு பகுதியினுள் காணப்படும் அறிவித்தல் பகை ஒன்று. மேற்புறமாக உள்ள வாசகம்:"நீங்கள் சபடிஸ்டா போராளிகளின் பிரதேசத்தில் இருக்கிறீர்கள். இங்கே மக்கள் ஆணையிடுவார்கள் அரசாங்கம் கீழ்ப்படியும்". கீழே உள்ள வாசகம்: "வடக்கு வலையம். நல்லரசு சபை. - ஆயுதக்கடத்தல், போதை மருந்து பயிரிடல், போதை மருந்து பயன்பாடு, நச்சுத்தன்மையான பானங்கள், சட்டவிரோதமான மர விற்பனை போன்றன கடுமையாக தடுக்கப்பட்டுள்ளது. - இயற்கையின் அழிவுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள்". - கூட்டரசு மேம்பாதை 307, சியாபஸ்
Remove ads

போராட்டமும் அதன் பின்னணியும்

Thumb
மார்க்கோஸ்

1994 ஜனவரி முதல் திகதி NAFTA உடன்பாடு நடைமுறைக்கு வந்த அன்றுதான் சபடிஸ்டாக்கள் பற்றி உலகளாவிய அறிதல் நிகழ்ந்தது. மெக்சிகோவின் தற்போதைய அரசாங்கத்தை தூக்கியெறிவது சபடிஸ்டாக்களின் அடிப்படை நோக்கம் அல்ல. மாறாக, சியாபஸ் பகுதிமீதான மெக்சிகோ அரசின் பாரபட்சமான போக்கினை வெளியுலகிற்கு வெளிச்சம்போட்டு காட்டுவதும், சியாபஸ் பகுதியின் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடவெளியை மேலும் அதிகப்படுத்தும் என அவர்கள் கருதுகிற NAFT உடன்பாட்டை எதிர்ப்பதுமே அவர்களது போராட்டத்தின் அடிப்படையாகும். தேசிய விடுதலைக்கான சபடிஸ்டா படை, மெக்சிகோவிலிருந்து பிரிந்துசென்று தனியரசமைக்கும் கோரிக்கையை வலுவாக முன்வைக்கவில்லை. அதற்கு மாற்றாக, சியாபஸ் பகுதிக்கான கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தினையே கோரி போராடுகின்றனர். இத்தன்னாட்சியானது, மற்றைய கோரிக்கைகளுக்கு மேலதிகமாக சியாபசிலிருந்து பெறப்படும் இயற்கை வளங்கள் மேலும் நேரடியாக அப்பகுதி மக்களின் வளமான வாழ்வுக்கு பங்களிக்கக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையானது என அவர்கள் கருதுகிறார்கள். எடுத்துக்காட்டாக, மெக்சிகோவின் வழங்கலுக்கு தேவையான நீர் வளம் சியாபசிலிருந்தே பெற்றுக்கொள்ளபடும் நிலையில், சியாபச் பகுதியில் வாழும் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரிதும் சிரமப்படும் நிலை காணப்படுவதை கூறலாம்.

1994 ஜனவரி 12ம் நாள் சபடிஸ்டாக்களால் செய்யப்பட்ட ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தத்துடன் சியாபஸ் பகுதியில் சிறு ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்தன. அன்று முதல் முழுஅளவான மோதல்கள் எதுவும் நிகழவில்லை. ஆனால் மெக்சிகோ அரசாங்கம் துணைப்படை குழுக்களை பயன்படுத்தி மென்தீவிர யுத்தத்தினை இக்கிளர்ச்சியாளர்களுக்கெதிராக புரிந்துவருகிறது.

அதேவேளை இவ்வியக்கத்தினர் தம்பக்கத்திலிருந்து எந்தவிதமான படை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது பாரியளவான ஊடக பரப்புரை போராட்டத்தினை முன்னெடுத்துச்செல்கின்றனர். இணையத்தை அடிப்படையாகக்கொண்ட பாரிய பரப்புரை வலையமைப்பயும் இவர்கள் கொண்டிருக்கின்றனர். இப்பரப்புரை போராட்டத்தின் விளைவாக உலகெங்குமுள்ள இடதுசாரிக்குழுக்களினுடைய ஆதரவினை இவ்வியக்கத்தினர் சம்பாதித்துக்கொண்டிருக்கின்றனர்.

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads