தேசிய கல் மர பூங்கா, திருவக்கரை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
திருவக்கரை தேசிய கல் மர பூங்கா (National Fossil Wood Park, Tiruvakkarai) ஒரு புவியியல் பூங்காவாகும். இந்த பூங்கா இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் திருவக்கரையில் அமைந்து உள்ளது. இந்த பூங்கா இந்தியா புவியியல் ஆய்வு மையத்தால் பராமரிக்கபடுகிறது.[1] ஐரோப்பாவை சேர்ந்த இயற்கையியலர் சொன்னேரெட் என்பவர் முதன்முதலில் கல் மரங்கள் இருப்பு குறித்து இவ்விடத்தை 1781இல் ஆவணம் செய்தார்.
தேசிய கல் மர பூங்கா, திருவக்கரை National Fossil Wood Park, Tiruvakkarai | |
---|---|
வகை | புதைபடிம பூங்கா |
அமைவிடம் | தமிழ்நாடு, இந்தியா |
ஆள்கூறு | 12°01′09″N 79°39′12″E |
பரப்பளவு | 247 ஏக்கர்கள் (100 ha) |
உருவாக்கம் | 1940 |
இயக்குபவர் | இந்திய புவியியல் ஆய்வு மையம் |
நிலை | பாதுகாக்கப்பட்ட பகுதி |
இங்கு இருக்கும் கல் மரங்கள் சுமார் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.இங்கு 200 மர தண்டுகள் சுமார் 247 ஏக்கர்(1.00) பரப்பளவில் உள்ளது. மரங்கள் அனைத்தும் 3 முதல் 15 மீட்டர் நீளமும் 5 மீட்டர் சுற்றளவும் கொண்டதாகும். இங்கு இருந்த காட்டு பகுதியானது பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட மிகபெரும் வெள்ளத்தால் மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்க வேண்டும். இங்கு இருக்கும் கல் மரங்கள் பலவும் படுக்கை நிலையில் உள்ளதைச் சான்றாக கருதலாம்.[2]
"கல்லாகச்சமைதல்" என்னும் முறையில் இங்கு இருந்த 77மரபடிமங்கள் சிலிக்கா எனப்படும் மணல் துகள்களாக மாற்றி அதனுள் இருக்கும் நீரை இறுக்கத்தினால் வெளி ஏற்றி மேல்படிந்த இந்த நிலை அடைந்தன என கூறலாம் .உலகில் உள்ள சில தொல்லியில் பூங்கா மட்டுமே மட்டும் இங்கிருக்கும் படிமங்கள் போல் பாதுகாப்பாக இருக்கும் அதற்கும் காரணம் இங்கு இருந்த சிலிக்கா மீது எரிமலை சாம்பல் படிந்து இருக்க வேண்டும் .[3]
இங்கு இருக்கு மர படிமங்களை கடலூர் மணற் கற்பாறை என்று கூறுகிறார்கள்.இங்கு இருக்கும் சில கல் மரங்களின் குறுக்குவெட்டுத் தோற்றதில் அதன் சுருள் வளையம் நம்மால் பார்க்க முடியும்.அந்த சுருள் வளையங்களை எண்ணி அவற்றின் வயதை நம்மால் கணக்கிட முடியும் .[4]
புதுவையில் இருந்து மைலம் செல்லும் வழயில் சுமார் 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருவக்கரை.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.