தென்பெண்ணை ஆறு

From Wikipedia, the free encyclopedia

தென்பெண்ணை ஆறுmap

தென்பெண்ணை ஆறு தென்னிந்தியாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்று. கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் (நந்தி துர்க்கம்) பெண்ணை ஆறாக பிறந்து, 430 கிமீ தூரத்தில் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1]

Thumb
தமிழக ஆறுகள்

தென்பெண்ணை ஆறு, கர்நாடகா மாநிலத்தில் 112 கிமீ நீளத்திலும், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் 180 கிமீ நீளத்திலும், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் 34 கிமீ நீளத்திற்கும், விழுப்புரம் ,திருக்கோவிலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 106 கிமீ நீளத்திற்குப் பாய்ந்து, இறுதியில் தமிழ்நாட்டின் கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இதன் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் சுமார் 14,449 சதுர கி.மீ2 ஆகும். மார்கண்ட நதி, பாம்பாறு, வன்னியாறு, கல்லாறு, கெடிலம் ஆறு இதன் முக்கிய துணையாறுகளாகும்.[2]

நீர்த்தேக்க கட்டமைவுகள்

ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்தேக்கம், கிருட்டிணகிரி அணை, ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள நெடுங்கல் அணை, திருவண்ணாமலை மாவட்டத்தில் சாத்தனூர் அணை, சாத்தனூர் பிக்கப் அணை, விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோயிலூர் அணை, எல்லீஸ் அணை, தளவானூர் தடுப்பணை, சொர்ணாவூர் அணை, ஆகியவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்க கட்டமைப்புகள்.

ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊர்கள்

காவேரிப்பட்டிணம்,மஞ்சமேடு,இருமத்தூர், ஈச்சம்பாடி, அகரம், நெடுங்கல், தொண்டமானூர் அகரம், அனுமந்தீர்த்தம், நீப்பத்துறை , மூங்கில்துறைப்பட்டு, மணலூர்பேட்டை,திருக்கோவிலூர், மரகதபுரம், பேரங்கியூர், தளவானூர்,கண்டரக்கோட்டை, மேல்குமாரமங்கலம், சொர்ணாவூர்,மேல்பட்டாம்பாக்கம்,மற்றும் கடலூர் ஆகும்.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.