துட்டகைமுனு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி (சிங்களம், දුටුගැමුණු duṭugämuṇu) (சிங்கள வழக்கில் துடுகெமுனு) என்பவன் இலங்கை வரலாற்றில் கி.மு. 161 முதல் கி.மு. 137 வரை ஆட்சி செய்ததாக மகாவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அரசனாவான். இவனே அனுராதபுரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் அரசனான எல்லாளனுடன் போரிட்டவனாவான்.
துட்டகைமுனு | |||||
---|---|---|---|---|---|
அனுராதபுரத்தின் அரசன் | |||||
ஆட்சி | கி.மு161 – கி.மு 137 | ||||
முடிசூட்டு விழா | கி.மு 161 | ||||
முன்னிருந்தவர் | எல்லாளன் | ||||
சத்தாதீசன் | |||||
அரசி | அரசி ரன்மனிக்க | ||||
| |||||
மரபு | விஜயன் | ||||
தந்தை | காவன் தீசன் | ||||
தாய் | விகாரமஹதேவி | ||||
பிறப்பு | திஸ்ஸமகாராம , அம்பாந்தோட்டை | ||||
இறப்பு | கி.மு 137 |
இவனை, சிங்கள அரசனாகவும்[1], மாபெரும் வீரனாகவும், இலங்கை முழுதும் பௌத்தம் பரவுவதற்கு காரணமானவனாகவும் மகாவம்சம் இவனை போற்றி புகழ்கிறது. மகாவம்சம் ஒரு இலக்கியமாகவும், அதன் பாட்டுடைத்தலைவனாக துட்டகைமுனுவும் குறிப்பிடப்படுகிறான்.
இவன் எல்லாளனுடன் தோற்கடிக்கவேண்டும் என்ற எண்ணத்தோடையே வளர்ந்தான். இவன் சிறிது பெரிதானதும் தனது தந்தையிடம் முதல்முறையாக "எல்லாளனுடன் போர் செய்யப்போகிறேன்" என்று கேட்டான்.அ தற்கு அவனது தந்தை இப்பொழுது உன்னால் எல்லாளனுடன் போர் செய்ய முடியாது என்றார். சிறிது காலத்தின்பின் இரண்டாவது முறையாக தனது தந்தையிடம் "எல்லாளனுடன் போர் செய்யப்போகிறேன்" என்று கேட்டான். அவனின் தந்தை திரும்பவும் அதே பதிலையே சொன்னார். மூன்றாவது முறையாகக் கேட்ட பொழுதும் அவனது தந்தை அதே பதிலளித்ததால் அவன் தனது தந்தையுடன் கோபித்துக்கொண்டு பெண்கள் அணியும் ஆடை ஆபரணங்களை அனுப்பி "நீ ஒரு கோழை என்பதாலையே பெண்களைப்போல் பயப்படுகின்றாய். இதை அணிந்து கொண்டிரு" என்று கூறிவிட்டு மலை நாட்டிற்குச் சென்றுவிட்டான். அவன் இந்த இழிய செயலை செய்ததால் அவனுடைய பெயரில் துட்ட என்ற பெயரை சேர்த்து துட்டகைமுனு என்று அழைத்தனர்.
எல்லாளன் எனும் தமிழ் மன்னன் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு சுமார் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுடன் போர்தொடுத்த துட்டகமுனுவின் படைகள் எல்லாளன் படையிடம் தோற்று பின்வாங்க ஆரம்பித்தன , போரில் தோல்வியை தவிர்ப்பதற்காக துட்டகைமுனு சாதுரியமாக, எல்லாளனை ஒற்றைச்சமருக்கு அழைக்க, யுத்த தர்மத்தின் படி எல்லாளனும் அதை ஏற்று போர் புரிந்தான், நீண்ட நேர சமருக்கு பிறகு, வயோதிகனான எல்லாளனை, துட்டகைமுனு வெற்றிபெற்றான், இறந்த எல்லாளனின் வீரத்தை மெச்சி, அவனுக்கு சிலை எழுப்பி, மரியாதை செய்தான்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.