Remove ads
From Wikipedia, the free encyclopedia
திட்ட உணவு (உணவூட்டம்) Diet (Nutrition) என்பது எவ்வளவு உணவு மனிதன் அல்லது பிறவுயிாினங்கள் உட்கொள்கிறது என்பதைக் குறிக்கிறது. திட்ட உணவு எப்பொழுதும் எதை உணர்த்துகிறது என்றால், உடல்நலனிற்கு ஏற்ற குறிப்பிட்ட உணவூட்ட முறை அல்லது உடல் எடை குறைப்பதற்கான காரணங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இருந்த போதிலும் மனிதன் அனைத்துண்ணி வகையைச் சார்ந்தவன், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு கலாசாரத்தை பின்பற்றுபவனாக இருப்பதால் சில உணவு விருப்பத்தேர்வாகவும் அல்லது சில உணவிற்கு விலக்கும் அளிக்கப்படுகின்றன. முழு ஊட்டச்சத்து என்பது உயிர்ச்சத்துக்கள், தாது உப்புகள், முக்கியமான அமினோ அமிலங்கள் ஆகியவற்றை உட்கொள்ளல் மற்றும் உறிஞ்சிதல் ஆகும். புரதத்திலிருந்து அமினோ அமிலங்களும், கொழுப்புச்சத்துப் பொருட்களில் இருந்து முக்கியமான கொழுப்பு அமிலங்களும், மேலும் சக்தியளிக்கக் கூடிய உணவு மாவுச்சத்திலிருந்தும் கிடைக்கின்றன. திட்ட உணவுப் பழக்கமானது மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும், உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளையும் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சில கலாச்சாரம் மற்றும் மதமானது தம் மக்கள் எவ்வகை உணவினை உட்கொள்ள வேண்டும் என கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, யூத மதமானது சட்டத்திற்குட்பட்டுத் துப்புரவாக கால்நடைகளை அறுத்தலை அனுமதிக்கிறது. முகமதியர், ஹலால் - இறைச்சிவெட்டும் முறையில் வெட்டப்பட்ட உணவையே உட்கொள்கின்றனா். புத்தமதத்தைச் சார்ந்தவர்கள் பொதுவாக காய்கறி உணவையே உண்கின்றனர். உணவு உட்கொள்ளும் நடைமுறை மற்றும் மாமிச உணவு உட்கொள்ளுதல் என்பது சமய உட்பிரிவுக்கு உட்பட்டதாக கருதப்படுகிறது. [1] இந்து மதத்தைப் பொருத்த வரை சைவ உணவே சிறந்தாகக் கருதப்படுகிறது. ஜைன மதத்தில் கண்டிப்பாக சைவ உணவை மட்டுமே உட்கொள்ள வேண்டும் மற்றும் தாவரங்களின் வேர்களில் இருந்து வளரக் கூடிய கிழங்கு வகைகளை போன்றவற்றையும் உண்ணக் கூடாது.
நிறைய மக்கள் தற்போது, விலங்கிலிருந்து பெறப்படும் உணவை கைவிடுவதை பல்வேறு நிலைகளில் இருந்து தேர்வு செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, நன்கு வளைந்து கொடுப்பவர்கள் (அதாவது காய்கற் உணவோடு சேர்த்து எப்போதாவது விலங்குணவையும் எடுத்துக் கொண்பவர்கள்), காய்கறி உணவை மட்டும் உட்கொள்பவர்கள், விலங்குகளில் இருந்து பெறக் கூடிய உணவை மட்டுமே உண்பவர்கள், பழங்களோடு கொட்டைகளையும் உணவாக உட்கொள்பவர்களாக பிறிக்கப் படுகிறார்கள். இவ்வகையான உணவைத் தேர்வு செய்வதன் நோக்கம்யாதனில், உடல் நலக் காரணங்கள், மரணத்தை தவிர்த்தல், சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்து தாக்கத்தை குறைத்துக் கொள்ளவதும் ஆகும். இருந்த போதிலும், உணவுகளில் குறைந்த தாக்கங்கள் இருப்பதைப் பற்றிய பொது அனுமானங்கள் தவறானவை என்று அறியப்படுகின்றன.[2] சமைக்கப்படாத உணவு உண்பவர்கள் சமகாலத்தில் போக்காக மாறியிருக்கிறது. இந்த உணவுத்திட்டமானது, வைட்டமின்கள் மற்றும் சாதாரன ஊட்டச்சத்தது தேவையை முறையாக ஈடுசெய்கிறது.
குறிப்பிட்ட உணவானது உடல் எடையை கூட்டவோ குறைக்கவோ தேர்வு செய்யப்படுகிறது. உணவுத்திட்டத்தை மாற்றியமைப்பது அல்லது உணவுத்திட்ட வழியில் செல்வது என்பது உடலில் சேர்த்து வைக்கப்பட்ட கொழுப்பபை சரி செய்வதன் மூலம், உடலின் சக்தி சமநிலையையும் மற்றும் உடல் எடையையும் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடிகிறது. குறிப்பிட்ட உணவு திட்டத்திற்காக, சில குறிப்பிட்ட உணவானது பரிந்துரைக்கப்படுகிறது அல்லது உணவு திட்டம் மாற்றியமைக்கப்படுகிறது இந்த உணவுத் திட்டத்தோடு உடற்பயிற்சியும் சேர்க்கப்படுகிறது. குறிப்பிட்ட சில உடல் எடை குறைப்பு நிரலானது உடல்நலத்திற்கு தீங்காக மாறிவிடுகிறது. ஆனால், சிலர் இத்திட்டத்தில் பயனடையவும் செய்கிறரர்கள். சத்தான உணவுத் திட்டமும் மற்றும் உடல் எடை மேலாண்மை உணவுத் திட்டமும் எப்போதும் தொடர்புடையதாக உள்ளது. இவை இரண்டுமே உடல்நல எடை மேலாண்மையை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான உணவு திட்டத்தை கடைபிடிப்பதன் மூலம் உடல் நலப் பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. மற்றும் இவ்வுணவு உடலுக்கு சரியான அளவில் வைட்டமின்கள், தாது உப்புகள், மற்றும் வேறு சத்துப் பொருட்களையும் கொடுக்கிறது.
உண்ணல் சீர்குலைவு என்பது மனநல சீர்குலைவினால் ஏற்படுகிறது. மனநல சீர்குலைவானது, இயல்பான உணவு உட்கொள்ளுதலை பாதிக்கிறது. இதை பிறழ் உணவுப் பழக்கம் என வரையறுக்கப்படுகிறது. இப்பழக்கம் குறைந்த அல்லது அதிகப்படியான உணவை உள்ளடக்கிறதாக இருக்கலாம்.
சத்தான உணவானது, உகந்த உடல்நலத்தை முன்னேற்றுகிறது அல்லது உடல்நலனை சமநிலைப்படுத்துகிறது. வளர்ந்த நாடுகளின், செல்வாக்கு என்பது, கட்டுப்பாடற்ற அளவில் உட்கொள்ளுவது மற்றும் பொருத்தமற்ற உணவு விருப்பங்களையும் உட்கொள்வதை தேர்வு செய்வதை சாத்தியமாக்குகிறது. [3] உடல்நல முகவர்கள் பாிந்துரைப்பது யாதெனில், சாதாரனமான உடல் எடையைக் கொண்ட மக்கள் மிகக்குறைந்த சக்தி நிறைந்த உணவை உட்கொள்பவர்கள் ஆவர், மேலும் இவர்கள் சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர் பானங்கள், காய்கறி உணவை உண்ணல், குறைந்த அளவு வுதிய இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உட்கொள்ளவும், குறைந்த அளவே மது பானம் அருந்தவும் பரிந்துரைக்கிறார்கள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.