Remove ads
தாரிக் அலி இடதுசாரிக் கொள்கை அறிஞராகவும் நாத்திகராகவும் எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் வ From Wikipedia, the free encyclopedia
தாரிக் அலி (Tariq Ali, அக்டோபர் 21, 1943) இடதுசாரிக் கொள்கை அறிஞராகவும் நாத்திகராகவும் எழுத்தாளராகவும் நூலாசிரியராகவும் விளங்கி வருபவர்[1][2]. தி கார்டியன், கவுன்டர்பஞ்ச், லண்டன் ரிவ்யூ புக்ஸ் ஆகிய இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதுபவர்.
தாரிக் அலி | |
---|---|
தாரிக் அலி -இலண்டன் இம்பீரியல் கல்லூரியில் (2003) | |
பிறப்பு | 21 அக்டோபர் 1943 லாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா |
தொழில் | இராணுவ வரலாற்றாளர் எழுத்தாளர் செயற்பாட்டாளர் |
கல்வி நிலையம் | பஞ்சாப் பல்கலைக்கழகம் எக்ஸ்ட்டெர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு |
வகை | உலக அரசியல் வரலாறு பிற்குடியேற்றவாதம் (Postcolonialism) |
துணைவர் | சூசன் வாட்கின்ஸ் |
பாக்கிசுதானில் உள்ள லாகூரில் கல்வியில் சிறந்த குடும்பத்தில் தாரிக் அலி பிறந்தார்[3][4]. இவருடைய தந்தையார் ஒரு புகழ் பெற்ற பத்திரிகையாளர். தாயார் தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் பெண்களின் உரிமைகளுக்கும் பாடுபட்டவர் பெற்றோர் இருவருமே பொதுவுடைமைக் கொள்கையிலும் இறை மறுப்புக் கொள்கையிலும் பிடிப்புடன் இருந்தனர்[5]. இவருடைய அம்மா வழித் தாத்தா பஞ்சாப் மாநில பிரதம அமைச்சராவார்[6]. இத்தகைய குடும்பச் சூழலில் தாரிக் அலி வளர்ந்ததால் இக்கொள்கைகளில் முனைப்பான ஈடுபாடு ஏற்பட்டது. இருப்பினும் இசுலாம் சமயத்தின் கோட்பாடுகளையும் கற்றுத் தேர்ந்தார்.
மாணவப் பருவத்திலேயே பாக்கிசுத்தானின் இராணுவ ஆட்சியைக் கண்டித்து போராட்டங்களில் கலந்து கொண்டார்.எனவே இவருடைய கல்வி தடைப்படுவதைத் தவிர்க்க எண்ணி தாரிக் அலியின் பெற்றோர். இவரை இங்கிலாந்தில் உள்ள ஆக்சுபோர்டில் சேர்த்தனர்[3][7]. அங்கு தத்துவம் அரசியல் பொருளியல் ஆகியத் துறைப் படிப்புகளைக் கற்றார். 1965 ஆம் ஆண்டில் ஆக்சுபோர்டு யூனியனில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
தாரிக் அலி படம் தயாரிப்பவராகவும் இருக்கிறார். பாண்டுங் என்னும் பெயரில் படக்குழுமம் ஒன்றைத் தோற்றுவித்து நடத்திவருகிறார்.இவர் ஒரு சிறந்த நீச்சல் வீரரும் ஆவார். தாரிக் அலி இலண்டனில் வாழ்ந்து வருகிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.