தங்குதன்(II) குளோரைடு

வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia

தங்குதன்(II) குளோரைடு

தங்குதன்(II) குளோரைடு (Tungsten(II) chloride) W6Cl12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல்படிக் கொத்துச் சேர்மமான இது அடர் ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைந்து (H3O)2[W6Cl14](H2O)x என்ற உப்பைக் கொடுக்கிறது. இவ்வுப்பைச் சூடேற்றினால் மஞ்சள்-பழுப்பு நிறத்தில் தங்குதன்(II) குளோரைடு கிடைக்கும்.[1] கட்டமைப்பு வேதியியலைப் பொறுத்தவரையில் இது மாலிப்டினம்(II) குளோரைடின் கட்டமைப்பை ஒத்த கட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் இனங்காட்டிகள், பண்புகள் ...
தங்குதன்(II) குளோரைடு
Thumb
இனங்காட்டிகள்
12052-19-6 Y
ChemSpider 122844
InChI
  • InChI=1S/2ClH.W/h2*1H;/q;;+2/p-2
    Key: UDJQAOMQLIIJIE-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101282746
  • [Cl-].[Cl-].[W+2]
பண்புகள்
Cl12W6
வாய்ப்பாட்டு எடை 1,528.44 g·mol−1
தோற்றம் மஞ்சள் பழுப்பு திண்மம்
அடர்த்தி 5.44 கி·செ.மீ−3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
மூடு

தங்குதன் அறுகுளோரைடை பிசுமத்துடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் தங்குதன்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

Thumb
கொத்து எதிர்மின் அயனியின் கட்டமைப்பு [W6Cl14]2−
.

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.