தகழி ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி From Wikipedia, the free encyclopedia

தகழி என்னும் ஊர், கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில்‍ உள்ளது. இது சம்பக்குளம் மண்டத்திற்கு உட்பட்டது. பிரபல மலையாள எழுத்தாளரான தகழி சிவசங்கரப் பிள்ளை, இந்த ஊரைச் சேர்ந்தவர்.

இந்த ஊர், குட்டநாடு, அம்பலப்புழை வட்டங்களுக்குள் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 27.8 ச. கி.மீ.. இது 10 வார்டுகளைக் கொண்டது. குட்டநாடு வட்டத்தில் உள்ள ஒரே ரயில் நிலையம், தகழியில் அமைந்துள்ளது. இங்கு புத்த சமயம் சார்ந்த வரலாறும் உண்டு. புத்த கோயில்களும் உள்ளன. கேரளத்தின் ஆதிசேரர்கள் புத்த சமயத்தை தழுவியதாகவும் சொல்லப்படுகிறது. இங்கு அய்யப்பன் கோயிலும் உண்டு. அய்யப்ப பக்தர்களின் இரண்டாம் சபரிமலை என்றும் சிலர் அழைக்கின்றனர்.

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.