மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர் From Wikipedia, the free encyclopedia
டேவிட் பால்டிமோர் (David Baltimore, பிறப்பு 7 மார்ச் 1938) ஓர் அமெரிக்க உயிரியலாளரும் பல்கலைக்கழக ஆட்சியாளரும் ஆவார். இவர் 1975 இல் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றார். 1997 முதல் 2006 வரை கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக இருந்தார். இப்போது அங்கு தகைமைத் தலைவராகவும் இராபெர்ட் ஆந்திரூசு மிலிக்கன் கட்டில் உயிரியல் பேராசிரியராகவும் இருக்கிறார். இவர் 1990முதல் 1991வரை இராக்பெல்லெர் பல்கலைக்கழகத் தலைவராகவும் இருந்துள்ளார். 2007இல் அமெரிக்க அறிவியல் மேம்பாட்டுக்கழகத்தின் தலைவரானார். முனைவர் பால்டிமோர் உலக அறிவியலில் பெருந்தாக்கத்தை விளைவித்துள்ளார். குறிப்பாக நோயெதிர்ப்பியல், நச்சுயிரியல், புற்றுநோய் ஆய்வு, உயிரித் தொழில்நுட்பம், மீளிணைவு டி. என். ஏ. ஆய்வு ஆகிய புலங்களில் ஆய்வாளராகவும் ஆட்சியாளராகவும் கல்வியாளராகவும் அறிவியல் சார்ந்த பொதுக்கொள்கையாளராகவும் பெரும்பங்களித்துள்ளார். இவர் பல முனைவர்பட்ட, முதுமுனைவர்பட்ட மாணவர்களை வழிநடத்தியுள்ளார். இவர்களில் பலர் பல்வேறு புலங்களில் பெயர்பெற்ற ஆய்வாளர்களக உள்ளனர். நோபல் பரிசு மட்டுமன்றி, இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1999இல் தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார். இவர் தற்போது பரிந்துரையாளர் வாரியத்தில் இருக்கிறார்[1].
டேவிட் பால்ட்டிமோர் David Baltimore | |
---|---|
2013 இல் டேவிட் பால்ட்டிமோர் | |
பிறப்பு | மார்ச்சு 7, 1938 நியூயார்க் நகரம், நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | உயிரியல் |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் |
|
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | அலீசு உவாங் (1968; 1 பிள்ளை) |
இணையதளம் www |
வெளி ஒளிதங்கள் | |
---|---|
Nobel Prize Interview with Dr. David Baltimore, 26 April 2001, Nobel Prize.org | |
David Baltimore: Danger from the Wild: HIV, Can We Conquer It?, iBiology |
பால்டிமோர் 1968இல் மரு. அலைசு எசு. ஃஉவாங்கை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.