டெனாலி தேசியப் பூங்கா
ஆலாசுக்காவின் தேசியப் பூங்கா From Wikipedia, the free encyclopedia
ஆலாசுக்காவின் தேசியப் பூங்கா From Wikipedia, the free encyclopedia
டெனாலி தேசிய பூங்கா என்பது ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். டெனாலி தேசிய பூங்கா ஜார்ஜ் பார்க்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் அன்கொரஜிற்கு 250 மைல் வடக்கே உள்ளது. இந்த தேசிய பூங்காவின் பரப்பளவு சுமார் 9500 சதுர மைல்கள் (6 மில்லியன் ஏக்கர்). இந்தப் பகுதி ஆர்க்டிக் வட்டத்தின் அருகில் இருக்கும் ஓர் உறைபனிப் பிரதேசமாகும். இங்கு மிகவும் குளிராக இருந்தாலும் கோடை காலத்தில், வெப்பம் மிதமாக இருக்கும். டெனாலி பூங்காவின் நுழைவு கட்டணம் 50 டாலர் ஆகும். பெரும்பாலான உணவு சேவைகள் கோடை காலத்தில் மட்டுமே திறந்திருக்கும். டெனாலி பூங்காவில் 650 மேற்பட்ட வகையான பூக்கக் கூடிய செடி இனங்கள் உள்ளன. இந்த பூங்காவில் 20320 அடி உயரமான மவுண்ட் மெக் கின்லி மலை உள்ளது. மெக்கின்லி மலை வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். இம்மலையைச் சுற்றியே டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.
டெனாலி தேசியப் பூங்கா Denali National Park and Preserve | |
---|---|
டெனாலி (மெக்கின்லி மலை) வட அமெரிக்காவில் உயரமிக்க சிகரம் | |
அமைவிடம் | டெனாலி புரோவ், மடன்சுகா சுசிட்னா புரோவ், அலாஸ்கா, ஐக்கிய அமெரிக்கா |
அருகாமை நகரம் | கீலி |
ஆள்கூறுகள் | 63.43°N 150.32°W |
பரப்பளவு | 4,740,911 ஏக்கர்கள் (19,185.79 km2) (பூங்கா) and 1,304,242 ஏக்கர்கள் (5,278.08 km2) (பாதுகாக்கப்பட்ட பகுதி) [1] |
நிறுவப்பட்டது | பெப்ரவரி 26, 1917 |
வருகையாளர்கள் | 392,844 (in 2012)[2] |
நிருவாக அமைப்பு | தேசிய பூங்கா சேவை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.