Remove ads
From Wikipedia, the free encyclopedia
அன்டானியோ கார்லோசு பிராசிலேரோ டி அல்மீடா ஜோபிம் ( Antônio Carlos Brasileiro de Almeida Jobim, சனவரி 25, 1927 – திசம்பர் 8, 1994), பரவலாக டாம் ஜோபிம் (Tom Jobim), பிரேசிலிய பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் இசைகருவித் தொகுப்பாளரும் பாடகரும் பியனோ/கிடார் கலைஞரும் ஆவார். பாசா நோவா என்ற இசைப் பாணியின் உருவாக்கத்திற்குப் பின்னிருந்த முதன்மை விசையாகவும் விளங்கினார். இவரது பாடல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை பிரேசிலிலும் பன்னாட்டளவிலும் பல பாடகர்களும் இசைக்கருவிக் கலைஞர்களும் நிகழ்த்தி வருகின்றனர்.
அன்டானியோ கார்லோசு ஜோபிம் | |
---|---|
1994இல் அன்டானியோ பிராசிலேரோபதிவு இடைவேளையின் போது ஜோபிம் இளைப்பாறுகையில் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | அன்டானியோ கார்லோசு பிராசிலேரோ டி அல்மீடா ஜோபிம் |
பிற பெயர்கள் | அன்டானியோ கார்லோசு ஜோபிம், டாம் ஜோபிம், டாம் டொ வினிசியசு |
பிறப்பு | இரியோ டி செனீரோ, பிரேசில் | சனவரி 25, 1927
இறப்பு | திசம்பர் 8, 1994 67) நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா | (அகவை
இசை வடிவங்கள் | போசா நோவா, இலத்தீன ஜாசு, சாம்பா, பிரேசிலியப் பரவலிசை (MPB) |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் |
இசைக்கருவி(கள்) | பியானோ, கிட்டார், புல்லாங்குழல், வாய்ப்பாட்டு |
இசைத்துறையில் | 1956–94 |
வெளியீட்டு நிறுவனங்கள் | வெர்வ், வார்னர் பிரோசு, எலென்கோ, ஏ&எம், சிடிஐ, எம்சிஏ, பிலிப்சு, டெக்கா, சோனி |
இணைந்த செயற்பாடுகள் | வினிசியசு டி மோரேசு, அலோசியோ டி ஓலிவீரா, யுவாவு கில்பெர்டோ, அசுத்ருடு கில்பெர்டோ, இசுடான் கெட்சு, பிராங்க் சினாட்ரா, எல்லா பிட்செரால்டு, இசுடிங், கால் கோசுட்டா |
இணையதளம் | www2 |
இரியோடிசெனீரோவின் புறநகரப் பகுதி இபனேமாவை மையப்படுத்திய இபனேமாவின் பெண் ("Garota de Ipanema") என்ற பாடலுக்கு இசையமைத்ததிற்காக பெரிதும் அறியப்படுகின்றார். வினிசியசு டி மோரேசு எழுதி இவர் இசையமைத்த இந்தப் பாடல் வரலாற்றிலேயே மிக அதிகமாக பதிவுசெய்யப்பட்ட பாடலாக விளங்குகின்றது. ஜோபிம் இசையமைத்த பல பாடல்கள் இன்று ஜாஸ் மற்றும் பரப்பிசை தொகுப்புகளின் சீர்தரப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ளன. "கரோட்டா டி இபனேமா" பாடல் மட்டுமே மற்றபிற கலைஞர்களால் 240 முறை பதிவு செய்யப்பட்டுள்ளது.[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.