From Wikipedia, the free encyclopedia
டயேன் ஃபாசி, (Diane Fossey, ஜனவரி 16, 1932 – டிசம்பர் 26, 1985) என்னும் அமெரிக்க பெண்மணி கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்தியிருக்கிறார். நீண்டகாலம் ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டா நாட்டில் கொரில்லாக்களோடேயே வாழ்ந்து கொரில்லாவை பற்றி நுணுக்கமாக முறைப்படி குறிப்புகளைத் தொகுத்து ஆய்ந்து வந்தார். புகழ் பெற்ற பழைய இறந்துபட்ட உயிரின ஆய்வாளராகிய லூயி லீக்கி என்பாரால் ஊக்குவிக்கப்பட்டு இவர் கொரில்லாவைப்பற்றிய ஆய்வுகள் செய்தார். இவருடைய ஆய்வுகள் ஜேன் குட்டால் சிம்ப்பன்சி பற்றி நடத்திய அரிய ஆய்வைப்போல முதன்மையானது.
டயேன் ஃபாசி | |
---|---|
டயேன் ஃபாசி நவம்பர் 1984ல் எடுக்கப்பட்ட புகைப்படம் Yann Arthus-Bertrand | |
பிறப்பு | ஜனவரி 16, 1932 சான் பிரான்சிஸ்க்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | திசம்பர் 26, 1985 53) Volcanoes National Park, ருவாண்டா | (அகவை
குடியுரிமை | ஐக்கிய அமெரிக்கா |
துறை | Ethology, primatology |
பணியிடங்கள் | Karisoke Research Center, கார்னெல் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | San Jose State University (B.A., Occupational therapy, 1954) University of Cambridge (Ph.D., Zoology, 1974) |
அறியப்படுவது | Study and conservation of the mountain gorilla |
தாக்கம் செலுத்தியோர் | குட்டால், Louis Leakey, George Schaller |
டயான் ஃவாசி கலிபோர்னியாவில் ஃவேர்ஃவாக்சு (Fairfax) என்னும் இடத்தில் பிறந்து கலிபோர்னியாவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் வளர்ந்தார். 1954ல் இளநிலை பட்டமும், பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1974ல் உயிரின அறிவியலில் (Zoology) முனைவர் (Ph.D.) பட்டமும் பெற்றார். 1963 ஆம் ஆண்டுக்குள் கொரில்லாவைப்பற்றி ஆய்வு செய்ய போதிய ஆய்வுப்பணம் திரட்டிய பின் ஆப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு முனைவர் லீக்கி அவர்களையும் சந்தித்தார். காட்டு விலங்காகிய கொரில்லாக்களிடம் எப்படியோ இவர் போதிய நம்பிக்கையைப் பெற்று அவைகளோடு நெருங்கி இருந்து ஆய்வு செய்யப் பழகினார். 1967ல் இவர் ருவாண்டாவிலே ருஃகெங்கேரி என்னும் மாநிலத்தில், விருங்கா மலைப்பகுதிகளில் கரிசோக் ஆய்வு நடுவணகம் நிறுவினார். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் சேசனல் ஜியாகிரஃபிக் இதழில் வெளியாகின.
டயான் வாசி அவர்கள் எதிர்பாராத விதமாக தன் இருப்பிடத்தில் டிசம்பர் 26, 1985ல் கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவருடைய ஆய்வுகளால் தம்முடைய தொழில் கெடுவதாக நினைத்த சில கொள்ளைக்காரர்களோ, கொரில்லாக்களைக் கடத்துபவர்களுக்கு எதிராக போராடியதாலோ இக்கொலையைச் செய்ததாகக் கருதப்படுகிறது.[1] பரவலாக அறியப்பட்ட வார்லி மொவாட் என்னும் எழுத்தாளர், இந்நிலங்களைச் சுற்றுலாவுக்காகப் பயன்படுத்த ஆவலாய் இருந்த யாரோ சிலர் இக்கொலையைச் செய்திருக்க வேண்டும் என்னும் கருத்தை முன் வைக்கிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.