From Wikipedia, the free encyclopedia
டபிள்யூ75என்(பி)-விஎல்ஏ2 (W75N(B)-VLA2) என்பது நமது சூரியனைவிட 300 மடங்கு ஒளிர்வு கூடியதும், எட்டு மடங்கு பெரியதுமான வளர்ந்து வரும் ஒரு பெரும் முகிழ்விண்மீன் (protostar) ஆகும். ஐதரசன் மற்றும் ஹீலியம் வாயு அணுக்கூட்டத்தால் ஆன இவ்விண்மீன் 1996 ஆம் ஆண்டு முதல் நியூ மெக்சிகோ பாலைவனத்தில் உள்ள தொலைநோக்கி கருவிகள் மூலம் கார்லஸ் காரஸோ கொன்சாலேஸ் தலைமையிலான அமெரிக்க வானியலாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.
சனவரி 2015ஆண்டில் புவியில் இருந்து 4200 ஆயிரம் ஒளி ஆண்டு தொலைவில் அமைந்த இந்த இளம் விண்மீனுக்கு "W75N(B)-VLA2" எனப் பெயரிடப்பட்டுள்ளது.[1][2][3] இப்புதிய இளம் விண்மீன் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் நமது சூரியக் குடும்பம் உட்பட விண்வெளியின் பல்வேறு இரகசியங்களைக் கண்டறிய முடியும் என்று வான் அறிஞர்கள் நம்புகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.