From Wikipedia, the free encyclopedia
ஜோன் வயலட் ராபின்சன் FBA (née Maurice ; 31 அக்டோபர் 1903 - 5 ஆகஸ்ட் 1983) ஒரு பிரித்தானியப் பொருளாதார நிபுணரும் எழுத்தாளரும் ஆவார். பொருளாதாரத்தில் மிகப்பரவலாக அறியப்பட்ட , குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர். பின் கெயின்சியப் பொருளாதாரம் என்று அறியப்பட்ட பொருளாதார அணுகுமுறையின் முக்கிய நபராகவும் இருந்தார்.
1973இல் ராபின்சன் | |
பிறப்பு | சர்ரே, இங்கிலாந்து | 31 அக்டோபர் 1903
---|---|
இறப்பு | 5 ஆகத்து 1983 79) கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து | (அகவை
தேசியம் | பிரித்தானியர்h |
துறை | பொருளாதாரம் |
கல்விமரபு | பின் கெயின்சியப் பொருளாதாரம் |
தாக்கம் | காரல் மார்க்சு, ஜான் மேனார்ட் கெயின்சு, பியரோ சரஃபா ஆல்பிரட் எயிக்னர், நிக்கோலஸ் கால்டர், ராபின் ஹேனல், யனிவ்ஸ் வரௌஃபாகிஸ் |
பங்களிப்புகள் | ஜான் ராபின்சன் வளர்ச்சிப் பதக்கம் Amoroso–Robinson relation |
ஜோன் ராபின்சனின் இயற்பெயர் ஜோன் மோரிஸ் ஆகும். இரண்டாம் போயர் போரில் சண்டையிடுவதற்கு முன், ஜோன் தந்தையான பிரெடெரிக் பர்டன் மாரிஸ் , ஃப்ரெடெரிக் ஹோவர்ட் மார்ஷி என்பவரின் மகளும் எட்வர்ட் மார்ஷ் என்பவரின் சகோதரியுமான மார்கரெட் ஹெலன் மார்ஷ் என்பவரை செயிண்ட் ஜார்ஜ்ஸில் உள்ள ஹனோவர் சதுக்கத்தில் மணந்தார்.[1] அவர் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய ஓராண்டு கழித்து ஜோன் மோரிசஸ் 1903 ஆம் ஆண்டில் பிறந்தார்.
அவர் கேம்பிரிட்ஜில் உள்ள கிர்ட்டன் கல்லூரியில் பொருளியல் படிப்பை மேற்கொண்டார். இக்கல்லூரி பிரித்தானியக்கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான மாரிஸ் டாப்ஸின் செல்வாக்கின் கீழ் வந்தது.[2] "பிரிட்டனில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அட்டை ஒன்றை எடுத்துக் கொண்டிருந்த முதல் கல்வியாள டோப் ஆவார். டோப் இல்லாமலிருந்தார் கம்யூனிசம் கேம்பிரிட்ஜில் மேண்மையுற்றிருக்காது. அந்த அளவு டோப் கம்யூனிச கருத்துகளைப் பரப்புவதில் முக்கியத்துவம் பெற்றிருந்தார் " [3] இருப்பினும், அவருடைய மாணவர்கள் அனைவரும் அவருடைய அரசியல் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. "ஹார்டீஸ்" என்ற பெயர் கொண்ட ஒரு குழு அவரை கைப்பற்றி, அவரை கேம் ஆற்றில் வீசியது. பலமுறை இவ்வாறு செய்தும் அவர்களுடைய முயற்சிகள் பலனளிக்கவில்லை. இறுதியில் துன்புறுத்தல்கள் சலிப்பாகி தனியாக அவரை அக்குழுவினர் விட்டுவிட்டனர்.[4]
ஜோன் 1925 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பிறகு உடனடியாக ஆஸ்டின் ராபின்சன் என்ற பொருளாதார நிபுணரை மணந்தார். 1937 இல், அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் விரிவுரையாளரானார். அவர் 1958 இல் பிரித்தானிய அகாதமியில் சேர்ந்தார் மற்றும் 1962 இல் நியூன்ஹாம் கல்லூரியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 ஆம் ஆண்டில் அவர் கிர்ட்டன் கல்லூரியில் முழு பேராசிரியராகவும், உறுப்பினராகவும் சேர்ந்தார் . 1979 ஆம் ஆண்டில், அவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் கிங்ஸ் கல்லூரியின் முதல் பெண் கௌரவ உறுப்பினராகவும் ஆனார்.
"கேம்பிரிட்ஜ் ஸ்கூல் ஆஃப் எகானமிக்ஸ்" கல்லூரியில் உறுப்பினராக இருந்த ஜோன் ராபின்சன் [[கெயின்சியப் பொருளியல்|கெயின்சியப் பொருளாதாரக் கோட்பாட்டுக்கு]] ஆதாரவாகவும் அதனை விளக்கியும் குறிப்பிடதக்கப் பங்களிப்பை ஆற்றியுள்ளார்.குறிப்பாக 1936 மற்றும் 1937 ஆம் ஆண்டுகளில் அதன் வேலைவாய்ப்பு தாக்கங்களைக் குறித்து எழுதினார் (இது பெரிய பொருளாதார மந்தநிலையின் மத்தியில் வேலைவாய்ப்பு இயக்கவியல் பற்றி விளக்க முயற்சித்தது).
1933 ஆம் ஆண்டில் அவர் ‘நிறைவுறாப்பொருளாதாரப் போட்டிகள்” என்ற தனது நூலை வெளியிட்ட்டார். அதில் ஏகபோகம் என்ற ஒரு சொல்லைக் குறிப்பிடுகிறார். ஒரு விற்பனையாளருக்கும் வாங்குபவருக்குமிடையேயான உரையாடலை விவரிக்க இது பயன்படுத்தப்படுகிறது. ஜோன் ராபின்சன் இச்சொல்லைக் குறிப்பாக தொழிலாலர்களிடமிருந்து உழைப்பைச் சுரண்டுபவர்களைக் குறிக்கப் பயன்படுத்துகிறார்.. இந்த அமைப்பில் பணியமர்த்துபவரே பணியாளரின் ஊதியத்தை தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டவராக ஆகிறார்.
உழைப்பை வாங்குபவர்கள் பொதுவாக ஏகபோகிகள் என அழைக்கப்படுகின்றனர். அங்கு பணியமர்த்துபவர் ஊதியத்தை அமைப்பதற்கான சக்தியைக் கொண்டிருப்பார், அது பிகோவியன் சுரண்டலைப் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது [5] தொழிலாளர்கள் தங்கள் உழைப்புத்திறனுக்கேற்ற குறைந்தபட்ச ஊதியத்தை விட மிகவும் குறையான ஊதியத்தைப் பெறுவர். அவற்றின் குறு விவசாய உற்பத்திக்கு குறைவாக ஊதியம் கொடுக்கவும் இது அனுமதிக்கிறது. மகளிர் மற்றும் ஆண்களுக்கு இடையிலான சமமான உற்பத்தித்திறன் மற்றும் ஊதியம் இவற்றுக்கிடையேயான இடைவெளியை விவரிக்க ராபின்சன் ஏகபோகம் என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.