ஜோகார்னஸ்பேக் (Johannesburg) தென்னாபிரிக்காவின் மிகப்பெரியதும் மக்கள்தொகை கூடந்துமான நகரமாகும். இது கௌடெங் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.ஜோகானர்னஸ்பேக் உலகில் 40வது பெரிய கூட்டுநகரமாகும். இது பிழையாக தென்னாபிரிக்காவின் தலை நகரமாக கருதப்படுவதுண்டு. தென்னாபிரிக்காவின் உச்சநிலை நீதிமன்றமான யாப்பு நீதிமன்றம் இங்கு அமைந்துள்ளது.
ஜோகார்னஸ்பேக் | |
---|---|
குறிக்கோளுரை: Unity in Development | |
ஜோகார்னஸ்பேக்கின் அமைவிடம் | |
நாடு | தென்னாபிரிக்கா |
மாகாணம் | கௌடெங் |
தொடக்கம் | 1886 |
அரசு | |
• நகரத் தந்தை | ஆமோஸ் மசொன்டோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,644 km2 (635 sq mi) |
ஏற்றம் | 1,753 m (5,751 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 32,25,812 |
• அடர்த்தி | 1,962/km2 (5,080/sq mi) |
நேர வலயம் | ஒசநே+2 (SAST) |
இடக் குறியீடு | 011 |
இணையதளம் | www.joburg.org.za |
கனிமவளங்கள் நிறைந்தப் பகுதியில் அமைந்துள்ளமையால் ஜோகார்னஸ்பேக் பாரிய தங்க, வைர வியாபார மையமாக விளங்குகிறது. இங்கு தெற்கு ஆபிரிகாவின் பெரியதும் வேலைப்பழு கூடியதுமான ஓ. ஆர். தம்போ பன்னாட்டு விமானநிலையம் அமைந்துள்ளது.
தென்னாபிரிக்க மக்கள்தொகை கணிப்பீட்டின் படி இங்கு 3 மில்லியனுக்கதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஏனைய நகரங்களைவிட ஜோகார்னஸ்பேக் பரப்பளவில் கூடியதாகும். இது 1,644 ச.கி.மீ (635 ச.மை) பரப்பளவைக் கொண்டது. இதன் மக்கள்தொகை அடர்த்தி 1,962 inhabitants per ச.கி.மீ (5,082/ச.மீ) பாரிய ஜோகார்னஸ்பேக்கின் மக்கள்தொகை 8 மில்லியன் ஆகும்.
இரட்டை நகரங்கள்
ஜோகானஸ்பேர்கின் இரட்டை நகரங்கள்: [1]
|
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.