From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் கூட்டன் (James Hutton 3 சூன் 1726 - 26 மார்ச்சு 1797) என்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர், மருத்துவர், வேதியியலாளர், மற்றும் இயற்கையாளர் ஆவார்.[1] நவீன புவியியலின் தந்தை என மதிக்கப்படுகிறார்.[2][3]
எடின்பர்க்கில் பிறந்தார். எடின்பர்க் பள்ளியிலும் பின்னர் எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும் படித்தார். 17 ஆம் அகவையில் ஒரு வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்றார். ஆனாலும் வேதியல் ஆய்வுகளில் ஆர்வம் காட்டினார் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பாடம் கேட்டார். பின்னர் பாரிசு பல்கலைக் கழகத்தில் படித்து மருத்துவர் ஆனார்.[4]:2
புவியின் சீர்மைத் தன்மை (யூனீபாரமிடேரியனிஸம்) என்னும் அடிப்படைக் கோட்பாட்டை முதன் முதலாக வகுத்தவர். பூமியின் மேல் தட்டின் இயல்புகளை ஆராய்ந்தவர். புவி இப்போது இருப்பது போல எப்பொழுதும் இருந்து வருகிறது என்ற கருத்தைச் சொன்னார்.
பூமியின் கோட்பாடு என்ற பெயரில் ஒரு நூலை எழுதினார். அந்த நூல் இரண்டு தொகுதிகளில் வெளிவந்தது. மூன்றாம் தொகுதியை எழுதும்போது ஜேம்ஸ் கூட்டன் இறந்துவிட்டார். அவரது எழுத்து நடை எளிதில் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது என அறிஞர்கள் கருதுகிறார்கள்.[5] எனவே இவருடைய நெருங்கிய நண்பர் ஜேம்ஸ் பிளேபேர் என்பவர் ஜேம்ஸ் கூட்டனின் நூலின் கருத்துக்களை தெளிவாக விளக்கி ஒரு நூலில் எழுதினார்.
மேலும் சார்லசு லையில் என்ற ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மற்றொரு புவியியலாளர் ஜேம்ஸ் கியூட்டனின் புரட்சிக் கருத்துக்களை விளக்கப்படுத்திப் பிரபலமாக்கினார்.
Seamless Wikipedia browsing. On steroids.