ஜேதவனம்
From Wikipedia, the free encyclopedia
ஜேதவனம் (Jetavana) பரத கண்டத்தின் பண்டைய நகரமான சிராவஸ்தி அருகே கௌதம புத்தர் மற்றும் பௌத்த பிக்குகள் தங்குவதற்காகவும், பௌத்த தத்துவங்களை மக்களுக்கு எடுத்துரைப்பதற்காகவும், அனாதபிண்டிகன் என்ற செல்வந்தன் புத்தருக்குத் தானமான வழங்கிய தோட்டமாகும்.[1] பல்லாண்டுகள் இந்த ஜேடவனத்தில் தங்கிய கௌதம புத்தர் தனது சீடர்களிடத்தும் பொது மக்களிடத்தும் சொற்பொழிவாற்றி பௌத்த தம்மங்களை கற்பித்தார்.[2]இது தற்கால இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.

யுவான் சுவாங், பாசியான் போன்ற சீன பௌத்த யாத்திரீகர்கள் ஜேடவனம் மற்றும் சிராவஸ்தி நகரம் தொடர்பான தகவல்களை தமது வரலாற்றுக் குறிப்பேடுகளில் குறித்துள்ளனர். இது தற்கால இந்தியாவின் உத்தரப் பிர்தேச மாநிலத்தின் சிராவஸ்தி நகரத்தின் அருகில் அமைந்துள்ள்து.
ஜேடவனக் கொடை
அனாதபிண்டிகனின் அழைப்பிற்கிணங்க, கௌதம புத்தர் சிராவஸ்தி நகரத்திற்கு தனது சீடர்களுடன் வருகை தர ஒப்புக்கொண்டார். புத்தரும் அவரது சீடர்களும் தங்குவதற்கும், பௌத்த தர்மங்களை மக்களிடையே கற்பிக்கவும் ஏற்ற இடமாக சிராவஸ்தி நகரத்திற்கு வெளியே இருந்த மரம், செடி, கொடிகள் கொண்ட பெரிய ஜேடவனத்தை, அனாதபிண்டிகன் அளவிற்கதிகமான வெள்ளி நாணயங்களை, ஜேடவனம் முழுவதுமாக நிரப்பியதன் மூலம், ஜேடவன உரிமையாளருக்கு விலையாகக் கொடுத்து வாங்கி புத்தருக்குத் தானமாக வழங்கினார். மேலும் ஜேடவனத்தில் விகாரையும் புத்தர் தங்குவதற்குக் குடிலையும் அமைத்தார்.
அகழ்வாராய்ச்சியும் நடப்பு நிலையும்
உள்ளூர் மக்களால் சாகேத்-மாகேத் (Sahet-Mahet) என்று அழைக்கப்படும் இடம் ஜேடவனம் மற்றும் சிராவஸ்தியின் தற்கால சிதிலங்கள் என்பதைக் கி மு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனத் துறவிகளின் குறிப்புகளைக் கொண்டு அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டறிந்தார்.[3]
தற்போது ஜேடவனம் வரலாற்றுப் பூங்காவாகப் பாதுகாக்கப்படுகிறது. ஜேடவனத்தில் உள்ள சிதிலமடைந்த விகாரைகளும், புத்தர் தங்கிருந்த குடிலும் தூபிகளும் பராமரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றது. முக்கிய பௌத்த யாத்திரைத் தலங்களில் ஜேடவனமும், சிராவஸ்தியும் ஒன்றாக உள்ளது.
படக்காட்சிகள்
- ஆனந்தபோதி மரம், ஜேடவன விகாரை
- புத்தரின் குடில், ஜேடவனம்
- ஜேடவனத்தின் ஒரு காட்சி
- சிறு தூபிகளுடன் ஜேடவனக் காட்சி
- ஆனந்தபோதி மரத்தடியில் தியானிக்கும் பிக்குகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.