இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ஜி. கே. மூப்பனார் (G. K. Moopanar ஆகஸ்ட் 19, 1931 - ஆகஸ்ட் 30, 2001) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.
கோ. கருப்பையா மூப்பனார் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19-8-1931 கபிஸ்தலம், தமிழ்நாடு |
இறப்பு | 30-8-2001 சென்னை |
அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரஸ் |
துணைவர் | கஸ்தூரி |
பிள்ளைகள் | 1 மகன் ஜி.கே.வாசன் , 1 மகள்உஷாராணி |
வாழிடம் | சென்னை |
As of ஆகஸ்ட் 30, 2001 மூலம்: |
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சுந்தரபெருமாள் கோவில் கிராமத்தில் பெரும்பண்ணையார் குடும்பத்தில் கோவிந்தசாமி மூப்பனார் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு புதல்வராக பிறந்தவர். இவரது உடன் பிறந்தோர் அறுவர் - சகோதரர்கள்: ஜி. ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத் மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்; சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா அம்மாள், சுலோச்சனா அம்மாள். இவர் மனைவி பெயர் கஸ்தூரி,இவருக்கு அந்த காலத்திலேயே 6000 ஏக்கர் நிலம் இருந்தது.
தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவராக ஒருமுறையும், நான்கு முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும், இரு முறை தமிழக காங்கிரஸ் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக எட்டாண்டுகளும் பணியாற்றிய இவர் கருத்து வேறுபாடால் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவி அதன் தலைவராக பணியாற்றி இறுதியில் 30-8-2001 ல் காலமானார்.
இவரது மகன் ஜி.கே.வாசன்.சென்ற நடுவண் அரசின் கப்பல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.