From Wikipedia, the free encyclopedia
இசுலாமியச் சட்டத்தில், ஜிசியா வரி (jizya அல்லது jizyah அரபு மொழி: جزية) என்பது இசுலாமிய அரசின் கீழ் வாழ்ந்த முஸ்லிமல்லாத குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட வரியைக் குறிக்கும் அரபுச் சொல் ஆகும்.[1][2][3] இவ்விதம் வரி செலுத்திய முஸ்லிமல்லா ஒருவர் இசுலாமிய அரசின் கீழ் பாதுகாப்புப் பெற்று ஏனைய முஸ்லிம் குடிகளுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெறுவார். ஆனால், ஜிஸ்யா வழங்கிடும் ஒருவர் போர்களில் பங்கேற்க வேண்டியதில்லை. அதனால் அவர்கள் அமைதியாக வாழவும் முன்னேறவும் வழியேற்பட்டது. இந்த வரியைப் பெண்களும், ஏழைகளும், சிறார்களும் செலுத்த வேண்டியதில்லை. ஜிஸ்யா வரி செலுத்தியவர், நாட்டைப் பாதுகாக்கப் போர்ப்படையில் சேர்ந்து பணியாற்றினால், அவர் ஜிஸ்யா செலுத்த வேண்டியதில்லை. இந்த வரியைக் காப்புவரி என்றும் வழங்குவர்.[4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.