Remove ads
From Wikipedia, the free encyclopedia
ஜார்ஜஸ் ஹென்றி ஜோசப் எடுவர்ட் இலமேத்ர (ⓘ 17 சூலை 1894 – 20 ஜூன் 1966) என்பவர் ஒரு பெல்ஜிய உரோமன் கத்தோலிக்க குருவும், வானியலாளரும் மற்றும் லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இவரே முதன் முதலில் அண்டம் விரிவாக்க கோட்பாட்டை '(expansion of the Universe) முன் மொழிந்தவர் ஆவார்.[1][2]. மேலும் இவரே முதன் முதலில் ஹபிள் விதியை நிறுவியவர். இவ்விதியை எட்வின் ஹபிள் வெளியிடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இவர் 1927இல் வெளியிட்டார்.[3][4][5][6]
ஜார்ஜஸ் இலமேத்ர | |
---|---|
பிறப்பு | பெல்ஜியம் | 17 சூலை 1894
இறப்பு | 20 சூன் 1966 71) பெல்ஜியம் | (அகவை
தேசியம் | பெல்ஜியர் |
துறை | அண்டவியல் வானியற்பியல் |
பணியிடங்கள் | லூவேயின் கத்தோலிக்க பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | கேம்பிரிச் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | அண்டம் விரிவாக்க கோட்பாடு பெரு வெடிப்புக் கோட்பாடு |
கையொப்பம் |
இவரே முதன் முதலில் அண்டம் எவ்வாறு தோன்றியது என்பது பற்றி விளக்க முயலும் பெரு வெடிப்புக் கோட்பாட்டை கூறியவர். ஆயினும் இவர் அதனை இப்பெயரில் அழைக்கவில்லை.[7][8]
இவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கத்தோலிக்க குருவாக இருந்தவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.